Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஷ்ரதா கபூரின் 'ஹசீனா பார்க்கர்' பட டிரெய்லர் வெளியானது!

மும்மையின் மோஸ்ட் வான்டட் குற்றவாளி தாவூத் இப்ராஹிமின் தங்கை ஹசீனாவின் வாழ்க்கையைத் தழுவி உருவாகும் படம் ஹசீனா பார்க்கர். ஆஷிக் 2, ஓகே ஜானு, ஹாஃப் கேர்ள்ஃப்ரெண்ட் போன்ற படங்களில் நடித்த ஷ்ரதா கபூர் ஹசீனா கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்

'மிஷன் இஸ்தான்புல்', 'ஸான்ஜீர்' ஆகிய படங்களை இயக்கிய அபூர்வா லக்யா இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். போஸ்டர், டீசர் மூலமே பரபரப்பை ஏற்படுத்திய இந்தப் படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியிருக்கிறது. இதுவரை அழகான ஹீரோயினாக டூயட் பாடிக் கொண்டிருந்த ஷ்ரதாவுக்கு இதில் டெரரான வேடம். படத்துக்காக வித்தியாசமான மேக்கப், எடை அதிகரிப்பது என நிறைய மெனக்கெட்டு நடித்திருக்கிறார். இதில் தாவூத் இப்ராஹிம் கதாபாத்திரத்தில் நடித்திருப்பது ஷ்ரதா கபூரின் சகோதரர் சித்தானந்த் கபூர். படம் ஆகஸ்ட் 18-ம் தேதி வெளியாக இருக்கிறது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close