Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் - இலங்கை வெற்றி! #ZimVsSL

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரை 3-2 என்ற கணக்கில் ஜிம்பாப்வே அணி கைப்பற்றியது. இரு அணிகளுக்கு இடையேயான ஒரு டெஸ்ட் போட்டி ஜூலை 14-ஆம் தேதி தொடங்கியது.

முதல் இன்னிங்ஸில் ஜிம்பாப்வே 356 ரன்களும், இலங்கை 346 ரன்களும் எடுத்தது. 10 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய ஜிம்பாப்வே அணி 377 ரன்களுக்கு ஆல்-வுட் ஆனது. 388 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இலங்கை அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 391 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இலங்கை அணியில் குணரத்னே (80*), டிக்வெல்லா (81), மெண்டிஸ் (66) ஆகியோர் அரைசதம் அடித்தனர். ஜிம்பாப்வே சார்பில் அதிகபட்சமாக கேப்டன் கிரீமர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

ஜிம்பாப்வே - இலங்கை டெஸ்ட் போட்டி 2017

சொந்த மண்ணில் ஒருநாள் போட்டித் தொடரை இழந்த இலங்கை அணிக்கு இந்த வெற்றி ஆறுதலைக் கொடுத்திருக்கும். தோல்வி அடைந்தாலும் சிறப்பான பங்களிப்பைக் கொடுத்த ஜிம்பாப்வே அணி வீரர்களுக்கு இப்போட்டி சிறந்த அனுபவத்தைக் கொடுத்திருக்கும். 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close