Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’உங்கள் தேர்தல் வாக்குறுதி என்னாச்சு’... பொன்.ராதாகிருஷ்ணனுக்கு எதிராக சீறும் குமரி மக்கள்!

மத்தியில் பா.ஜ.க. தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தால், முதல் கையெழுத்தே ஏழை இந்து மாணவ, மாணவிகளுக்குக் கல்வி உதவித்தொகை வழங்குவதுதான் என்ற பொய்யான வாக்குறுதியைக் கொடுத்து வாக்குகளைப் பெற்ற  மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மக்களிடமும் ஏழை இந்து மாணவ, மாணவிகளிடமும் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லை என்றால், பதவி விலக வேண்டும் என குமரி மாவட்ட காங்கிரஸ் கட்சி போர்க் கொடி உயர்த்தியுள்ளது. மேலும், இதை வலியுறுத்தி, வரும் 28-ம் தேதி நாகர்கோவிலில்  10,000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொள்ளும் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. 


 

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, குமரி மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன் பேசும்போது, ''இன்று மத்திய இணை அமைச்சராக இருக்கும் பொன்.ராதாகிருஷ்ணன், பதவிக்கு வரும் முன்பு ஏழை இந்து மாணவ, மாணவிகளுக்குக் கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும் எனக் கூறி ஆயிரக்கணக்கான மாணவ,மாணவிகளைக் கொளுத்தும் வெயிலில் நிற்கவைத்து, ஜூலையில் போராட்டம் நடத்தினார்.

அப்போது, பா.ஜ.க. மத்தியில் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தால், முதலில் போடும் கையெழுத்தே ஏழை இந்து மாணவ, மாணவிகளுக்குக் கல்வி உதவித்தொகை வழங்குவதுதான் என வாக்குறுதி அளித்தார். மத்தியில் பாஜக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்து மூன்று  வருடங்கள் ஆகியும் இன்னும் தனது வாக்குறுதியை அவர் நிறைவேற்ற வில்லை. எனவே,  ஏமாற்று  வாக்குறுதியை நிறைவேற்ற முடியவில்லை என்பதை ஒப்புக்கொண்டு, மக்களிடமும் ஏழை மாணவ, மாணவிகளிடமும் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லை என்றால், தனது தவறுக்காக பதவி விலக வேண்டும். இதை வலியுறுத்தி, வரும் 28-ம் தேதி நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, காங்கிரஸ் கட்சி சார்பில் 10,000-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொள்ளும் மிகப்பெரிய போராட்டம் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளனர்.

 

ஏற்கெனவே, கடந்த 3-ம் தேதி இந்து மக்கள் கட்சி சார்பில் நாகர்கோவிலில் நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது, 'தமிழகம் முழுவதும் ஏழை இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கக் கேட்டு, ஜூலையில் போராட்டம் நடத்தியவர், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன். பொதுமக்களைத் திரட்டி மாபெரும் போராட்டங்களை முன்னெடுத்தார். பின்னர், தனது தேர்தல்  வாக்குறுதியிலும் இதைத் தெரிவித்திருந்தார். கடந்த நாடாளுமன்றத்  தேர்தலில், கன்னியாகுமரி தோகுதியில் வெற்றிபெற்று அமைச்சரான பின், மூன்று ஆண்டுகள் கடந்தும் இதுவரை ஏழை இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வாங்கித் தர மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனால் முடியவில்லை. இதற்கு பொறுப்பேற்று உடனடியாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பதவி விலக வேண்டும்'' என்று அர்ஜூன் சம்பத்  தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close