Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மீண்டும் வலை வீசும் ஃப்ளிப்கார்ட்; சிக்குமா ஸ்னாப்டீல்?

இகாமர்ஸ் ஸ்னாப்டீல் நிறுவனத்தை வாங்குவதில் மும்முரமாக இருந்துவரும் ஃப்ளிப்கார்ட் இப்போது மீண்டும் அதற்கு வலை வீசி இருக்கிறது. இந்த முறை 850 முதல் 900 மில்லியன் டாலர் வரை தர முன்வந்துள்ளது.

இகாமர்ஸ்

இகாமர்ஸ் சந்தை நாளுக்கு நாள் விரிவடைந்துகொண்டிருக்கும் நிலையில் போட்டி நிறுவனங்களுக்கும் பஞ்சமே இல்லை. ஆரம்பத்தில் அமேசான், அலிபாபா போன்ற சில நிறுவனங்களே இணையம் மூலம் பொருட்களை விற்றுவந்த நிலையில் இன்று ஒவ்வொரு நாளும் ஒரு இகாமர்ஸ் நிறுவனம் உருவாகிக்கொண்டிருக்கிறது. இதனால் பெரிய நிறுவனங்களின் பிசினஸ் குறைந்திருப்பதோடு, வாடிக்கையாளர்களைத் தக்கவைக்கவும் ஈர்க்கவும் நிறுவனங்களுக்கிடையே விலைக்குறைப்பு அதிரடி ஆஃபர்கள் ஆகியவையும் அதிகரித்துள்ளன.

இது ஒருபக்கம் நடந்தால் மறுபக்கம் பிற நிறுவனங்களைப் பெரிய நிறுவனங்கள் விலைக்கு வாங்கிவிடும் வேலையும் நடக்கிறது. சமீபத்தில் அமேசானுக்கு அடுத்ததாக இகாமர்ஸில் முன்னணியில் உள்ள ஃப்ளிப்கார்ட் ஸ்னாப்டீல் நிறுவனத்தை வாங்கும் முயற்சியில் இறங்கியது. ஸ்னாப்டீல் நிறுவனத்துக்கு 500-600 மில்லியன் டாலர் தருவதாகக் கூறியிருந்தது. ஆனால் இந்த ஆஃபரை ஸ்னாப்டீல் ஏற்கவில்லை. நிறுவனத்தை விற்க மறுத்துவிட்டது.  

ஆனால் ஃப்ளிப்கார்ட் விடுவதாயில்லை. இப்போது ஸ்னாப்டீலுக்கான விலையை உயர்த்தியுள்ளது ஃப்ளிப்கார்ட். 850 முதல் 900 மில்லியன் டாலர் தருவதாகக் கூறியுள்ளது. ஃப்ளிப்கார்ட்டின் இந்த வலையிலாவது ஸ்னாப்டீல் சிக்குமா என்பதே இப்போதைய கேள்வியாக இருக்கிறது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close