Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' நாடகத்தில் நடித்ததால் திட்டிய ரசிகர்கள்: பாப் பாடகர் சோகம்

கேம் ஆப் த்ரோன்ஸ்

இங்கிலாந்தின் மிகப் பிரபலமான பாப் பாடகர் எட் சீரின், தன் ட்விட்டர்  கணக்கை  நீக்கியுள்ளார். அதற்குக் காரணம், 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' தொலைக்காட்சித் தொடர். ரசிகர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால், சோகத்துடன் ட்விட்டர் கணக்கை அழித்துள்ளார். 

ஆங்கிலேயர்கள், எல்லாவற்றிலும் கண்ணியமானவர்கள் என்று சொல்வார்கள். அது இல்லை என்று இப்போது நிரூபணமாகியுள்ளது. ஹெச்பிஓ தொலைக்காட்சித் தொடரான  'கேம் ஆஃப் த்ரோன்ஸின்'  ஏழாம் பாகம் ஒளிபரப்பாகத் துவங்கியுள்ளது. இதில், அந்நாட்டுப் பாடகர் எட் சீரின், ஒரு காட்சியில் கௌரவ வேடத்தில் தோன்றுகிறார். அந்த நாடகத்தின் முக்கியப் பாத்திரமான ஆர்யா ஸ்டார்க் வரும் காட்சியில், போர் வீரர்களுடன் கூட்டத்தோடு கூட்டமாகத் தோன்றிப் பாடுகிறார் எட்.  இது ஒளிபரப்பானதும் கேம் ஆஃப் த்ரோன்ஸ் ரசிகர்களுக்கு செம குஷியாகிவிட்டது. அவர் தோன்றிய காட்சிகளின் ஸ்கிரீன்ஷாட் செம வைரலாகப் பரவியது. எட் சீரின் ரிலீஸ் செய்த 'ஷேப் ஆஃப் யூ' வீடியோ பாடல், யூ டியூப்பில் 100 கோடி முறைக்கும் மேல் பார்க்கப்பட்டு, மெகா ஹிட் அடித்திருக்கும் நிலையில், கும்பலோடு கும்பலாக அவர் டிவி நாடகத்தில் தோன்றியது,  அவரின் ரசிகர்களிடையே கடும் எதிர்ப்பைக் கிளப்பியது. அவரது ட்விட்டர் கணக்கில் மானாவாரியாக திட்டித் தீர்த்தனர். ஒரு கட்டத்துக்கு மேல் ரசிகர்களின் அர்ச்சனை பொறுக்க முடியாமல், தன் ட்விட்டர் கணக்கையே அழித்துவிட்டார், எட் சீரின். 

இதற்கு முன்னும் ஒரு முறை ட்விட்டர் கணக்கை எட் சிரீன் அழித்துவிட்டு, பின்னர் மீண்டும் துவக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close