Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'கோலிதான் உலகில் சிறந்த பேட்ஸ்மேன்' - பாகிஸ்தான் பந்துவீச்சாளர் கருத்து!

அமீர்

உலகத்தில் சிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலிதான் என்று பாகிஸ்தானின் முன்னணி பந்துவீச்சாளர் முகமது அமீர் தெரிவித்துள்ளார். 

சாம்பியன்ஸ் டிராபி உலகக்கோப்பையில் பாகிஸ்தானுடன் மோதிய இறுதிப்போட்டியில் இந்தியாவின் தோற்றதற்கான காரணங்களில் ஒருவர் முகமது அமீர். 17 வயதில் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க வந்த   அமீர் 'மேட்ச் பிக்சிங்' புகாரில் சிக்கி 5 ஆண்டுகளுக்குத் தடை செய்யப்பட்டார். தடைக்காலம்  முடிந்து வந்த பிறகும் அமீரின் பெர்ப்பாமென்ஸில் எந்தக்குறையும் இல்லை.  

"அமீர் மீண்டும் களத்துக்கு வந்ததில் பெரும் மகிழ்ச்சி. தன் தவறுகளை உணர்ந்து அதைச் சரி செய்துகொண்டு களம் இறங்கியுள்ளார்.  அவர் எப்போதுமே சிறப்பான பந்துவீச்சாளராகவே இருந்துள்ளார்" என்று கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசியக் கோப்பை போட்டியின் போது இந்தியக்கேப்டன் கோலி தெரிவித்திருந்தார். விளையாட்டின் இடையிலும் இருவரும் ஒருவருக்கொருவர் நட்புடன் பேசிக்கொள்வார்கள். கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 போட்டிகளின் போது தனது கிரிக்கெட் பேட் ஒன்றை அமீருக்குக் கோலி பரிசளித்ததும் இவர்களின் நட்புக்கு எடுத்துக்காட்டாகச் சொல்லப்பட்டது. இந்நிலையில்  நேற்று திடீரென்று டிவிட்டரில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் சொன்னார் அமீர். அதில் 'உங்களின் பார்வையில் யார் சிறந்த பேட்ஸ்மேன்"? என்று ஒருவர் கேட்ட போது "விராட் கோலிதான்' என்று பதில் சொன்னார். அமீர். அதைத்தொடர்ந்து 'சச்சினை விக்கெட்டை வீழ்த்திய போது இருந்த மகிழ்ந்தீர்களா? அல்லது கோலியை அவுட் செய்தபோது இருந்த மகிழ்ந்தீர்களா? என்று இன்னொரு ரசிகர் கேட்க இரண்டுமே மிக மகிழ்ச்சியான தருணங்கள் என்று தெரிவித்தார். 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close