Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அன்டார்டிக் பகுதியில் நடக்கப்போகும் முதல் திருமணம்

திருமணம்

 

அன்டார்டிக் பகுதியில் நடக்கப்போகும் முதல் திருமணம் இது. அன்டார்டிக் ஆராய்ச்சியாளர்கள் இருவர், பிரிட்டிஷ் அன்டார்டிக் பகுதியில் முதல் முறையாக அதிகாரபூர்வ திருமணம் செய்துகொள்கின்றனர். டாம் சில்வெஸ்டரும், ஜூலி பவும் அன்டார்டிக் தீபகற்பத்தின் மேற்கில் இருக்கும் அடேய்லயீட் தீவில் உள்ள ரோதரா ஆராய்ச்சி நிலையத்தில் திருமணம் செய்துகொள்ள உள்ளனர். இவர்கள் திருமணம் விரைவில் நடக்க இருக்கிறது. திருமணத்தை, ஆராய்ச்சி நிலையத் தலைவரும் பிரிட்டிஷ் அன்டார்டிக் பகுதியின் நீதிபதியுமான பால் சாம்வெஸ் நடத்திவைக்க உள்ளார். 

‘‘அன்டார்டிகாவில்தான் எங்களின் திருமணம் நடக்க வேண்டும் என்று இருந்தது போல் உணர்கிறோம். உலகில் இதை விட சிறந்த இடம் இருக்க முடியாது’’ என்று மணப்பெண் தன் ஆசையை வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் அங்கு நல்ல வானிலையை அவர்கள் எதிர்பார்க்க முடியாது. உறைய வைக்கக் கூடிய குளிரும், மிகக் குறைந்த பகல் வெளிச்சம் மட்டுமே இருக்கும். 

ஷெஃபீல்டை சேர்ந்த சில்வெஸ்டர் கூறுகையில், ‘‘நாங்கள் அன்டார்டிகாவில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று முதலில் யாரோ கூறியபோது அது முடியாத காரியம் என்று மறுத்துவிட்டேன். பால் சாம்வேஸ், நீதிபதி ஆதலால் இதனை நடத்திவைக்க முடியும். எனவே, இது சாத்தியம் என்று தோன்றியதால் நானும் இதற்கு சம்மதித்தேன்,’’ என்கிறார் சில்வெஸ்டர். 

சில்வெஸ்டரும் பவும் கடந்த 11 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்கின்றனர். பனிக்காலத்தில் அன்டார்டிக் நிலையத்தைப் பராமரிக்கும் 20 பேர் கொண்ட குழுவில் இவர்கள் இருவரும் அடங்குவார்கள். இவர்கள் மலையேற பயிற்சிபெற்றவர்கள் மற்றும் ஆழ்ந்த அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான 2016-ம் ஆண்டின் பிரிட்டிஷ் அன்டார்டிக் சர்வேயில் பங்குபெறத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். 

எங்களுக்கு நெருக்கமானவர்களுடன் சின்னதொரு திருமண நிகழ்வைத்தான் விரும்பினோம். ஆனால், பூமியில் உள்ள தொலைதூர இடத்தில் எங்கள் திருமணம் நடக்கும் என்று நாங்கள் நினைக்கவில்லை என்று சில்வெஸ்டர் கூறியுள்ளார். இந்தத் திருமணம், பிரிட்டிஷ் அன்டார்டிக் பகுதியில் அரசாங்கத்தில் பதிவாகும். மேலும், இது பிரிட்டனில் செல்லுபடியாகும். 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close