Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'தமிழ்நாட்டில் நடப்பது பா.ஜ.க-வின் அடிமை அரசாங்கமா?': வளர்மதி கைதுக்கு சீமான் கண்டனம்


ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராகப் போராடிய மாணவி வளர்மதி, கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரைக் கைதுசெய்ததைக் கண்டித்துள்ளார், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

சீமான்

அவர் விடுத்துள்ள அறிக்கையில், "ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக துண்டறிக்கைப் பரப்புரைசெய்த சேலத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி அன்புத்தங்கை வளர்மதி கைதுசெய்யப்பட்டு, குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டிருப்பது, தமிழக அரசின் சர்வாதிகார காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கையைக் காட்டுகிறது. தமிழ்நாட்டில் நடப்பது, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசாங்கமா அல்லது பா.ஜ.க-வின் அடிமை அரசாங்கமா என்ற கேள்விக்கு, தங்கை வளர்மதியைக் குண்டர் சட்டத்தின் கீழ் அடைத்திருப்பதன்மூலம் பா.ஜ.க-வின் பரிசுத்தமான விசுவாசிகள் என்பதை எடப்பாடி பழனிசாமி அரசு நிரூபித்துள்ளது.

வளர்மதி

வளர்மதி மீதான வழக்குகளைத் திரும்பப் பெறப்பட வேண்டும் எனவும், அவர் மீதான குண்டர் சட்டத்தை ரத்துசெய்து உடனடியாக அவரை விடுதலைசெய்ய வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது. இல்லையேல், போராட்ட சக்திகளை ஒன்றுதிரட்டி, இந்த சர்வாதிகார ஆட்சிகளுக்கு பாடம் புகட்டும் வகையில் பெரும் போராட்டங்களை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் என இதன்மூலம் எச்சரிக்கிறேன் ". இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close