Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'பா.ஜ.க. அரசை விமர்சிப்பவர்கள் கைது செய்யப்படுகிறார்களா?': மு.க.ஸ்டாலின் ஆவேசம்!

'திருமுருகன் காந்தி, பேராசிரியர் ஜெயராமன், வளர்மதி ஆகியோரை விடுவிக்க வேண்டும்' என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

m.k.stalin


கதிராமங்கலம் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக மாணவி வளர்மதி துண்டுப் பிரசுரம் வழங்கும்போது கைதுசெய்யப்பட்டார். கைதுசெய்யப்பட்ட அவரை, காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். அவர் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதாலும், நக்சலைட்டுடன் தொடர்புடையதாலும் குண்டர் சட்டம் பதிவுசெய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த நிலையில், காவல்துறையினரின் செயலுக்கு தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக  அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'மாணவி வளர்மதி கைதுசெய்யப்பட்டுள்ளது கண்டனத்துக்குரியது. பேராசிரியர் ஜெயராமன், குண்டர் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டுள்ள திருமுருகன் காந்தி, வளர்மதி உள்ளிட்டோரை விடுவிக்க வேண்டும். தமிழக அரசின் இந்தச் செயல்கள், பா.ஜ.க. அரசை விமர்சிப்பவர்கள் மீது தொடுக்கும் போர் போல உள்ளது. தமிழக அரசு அடக்குமுறையில் ஈடுபடுவதைக் கைவிட வேண்டும்' என்றார். 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close