Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எந்த நேரத்திலும் ஆபத்து நேரலாம்! கிராம மக்களை அச்சுறுத்தும் மின்கம்பி

சிவகங்கை மாவட்டம், கன்னிமார் பட்டி கிராமத்தில் உயர்மின்னழுத்தமுள்ள மின்சாரக் கம்பிகள் வயல் வெளிகளில் செல்கின்றன. இந்த மின் கம்பிகள் கீழே தொங்கிய படி இருப்பதால் ஆடு, மாடுகள் ஏன் மனிதர்கள் கூட அதன்மீது  மோதி உயிரிழக்க நேரிடும் அபாயம் இருக்கிறது. மின்வாரிய அதிகாரிகளிடம் பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என கிராம மக்கள் புகார் சொல்லுகின்றனர்.

கிராம மக்கள் சொல்லும் போது, "அவசரத்தில் ஆடு, மாடுகளை விரட்டிச் சென்றால் பெரிய ஆபத்தை சந்திக்கவேண்டியது வரும். பிள்ளைகள் லீவு நேரங்களில் இந்தப் பக்கம்தான் விளையாட வருவார்கள். ஆக எங்கே சுற்றினாலும் ஆபத்து என்பது உறுதி. ரெண்டு கிலோ மீட்டர் தூரம் வரை மின்கம்பிகள் செல்கின்றன. கிராமம் ஒன்றாகக் கூடி அதிகாரிகளைச் சந்திக்க இருக்கிறோம். இவ்வளவு ஆபத்தான மின்கம்பியைச் சரி செய்யச் சொன்னால் மின்சார வாரியம் அலட்சியப்படுத்துகிறது" என்கிறார்கள் வேதனையுடன்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close