Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மாணவர்களின் சுமையைக் குறைக்க தெலங்கானா அரசு கொண்டுவந்திருக்கும் புதுத் திட்டம்!

ள்ளியில் படிக்கும்போதே, தங்கள் எடையைவிட அதிக எடைகொண்ட ஸ்கூல் பேக் கொண்டுபோகும் பிள்ளைகளுக்கு, தெலங்கானா அரசு புதுச் சட்டம் கொண்டுவந்து, மாணவர்களுக்கு விடிவுகாலத்தை அளித்துள்ளது.

தெலங்கானா மாநிலம்

Representational Image

கடந்த செவ்வாய்க்கிழமை, தெலங்கானா அரசுப் பள்ளி குழந்தைகள் அளவான பாடப் புத்தகங்களை மட்டுமே பள்ளிக்குக் கொண்டுவர வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இந்தச் சட்டம், இன்று (19.07.2017) முதல் கடைபிடிக்கப்படுகிறது. 

இந்தச் சட்டப்படி, பள்ளியின் பாடப் புத்தகங்கள் 1.5 கிலோ எடை ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு மணவர்களுக்கும், 2-3 கிலோ எடை மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கும், 4 கிலோ எடை ஆறு மற்றும் ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கும், 4.5 கிலோ எடை எட்டு மற்றும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கும், 5 கிலோ எடை பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் எனப் பிரிக்கப்பட்டுள்ளது. நேற்று வரை, 12 கிலோ எடையை ஆரம்பப் பள்ளி மாணவர்களும், 17 கிலோ எடையை மேல்நிலையில் படிக்கும் மாணவர்களும் சுமந்து சென்றனர். இது, அவர்களுடைய முதுகு, கால் என உடல் உறுப்புகள் பாதிக்கப்படும். இது, அவர்களுக்கு கோபத்தையும் ஏற்படுத்தும். எனவே, அவர்கள் பள்ளிக்குக் கொண்டுசெல்லும் பாடப் புத்தகங்களின் அளவை குறைத்திருக்கிறது தெலங்கானா மாநில அரசு.

"மாணவர்களுக்கு வீட்டுப் பாடமும் கொடுக்கக்கூடாது. அவர்கள் ஆசிரியர்களின் முன்னிலையில் பயிற்சி எடுக்க வேண்டும். ஏதாவது குறிப்பிட்ட பாடங்களுக்கு மட்டுமே வீட்டுப் பாடம் கொடுக்க வேண்டும் என்றும் அரசு கூறியுள்ளது. மாணவர்கள் அடுத்த நாள் என்ன புத்தகங்கள் கொண்டு வரவேண்டும் என்பதை ஆசிரியர்கள் முன் தினமே மாணவர்களுக்கு வலியுறுத்த வேண்டும். 

மேலும், பள்ளிகளில் சுகாதாரமான தண்ணீர் வழங்கப்பட வேண்டும். அதனால், வீட்டில் இருந்து பிள்ளைகள் தண்ணீர் சுமந்துவருவது குறையும்" என்று கூறியுள்ளது.

இந்தத் திட்டத்தை ஆந்திரப்பிரதேச குழந்தைகள் உரிமை மன்றமும் ஏற்றுக்கொண்டு, இதை ஆந்திராவிலும் செயல்படுத்த முயற்சி எடுத்துவருகிறது.  

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close