Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நீட் தேர்வுக்கு நீட்டா ஒரு சி.டி:  அரசுப் பள்ளி ஆசிரியரின் முயற்சி!

தமிழகத்தில், அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களின் மருத்துவக் கனவை நிறைவேற்ற வேண்டும் என மருத்துவத் தேர்வான நீட் நுழைவுத் தேர்வுகுறித்த பவர்பாய்ன்ட்டை 100 ஸ்லைடுகளுக்குள் (slides) எளிமையாகத் தயாரித்துள்ளார், மேலூர் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் சூரியகுமார். அவர் தயார் செய்த சி.டி குறித்து அவரிடம் விசாரித்தோம்.

 

 

" நீட் தேர்வு பற்றி மாணவர்களுக்கு, குறிப்பாக கிராமப்புற மாணவர்களுக்கு விழிப்புஉணர்வு ஏற்படுத்துவதற்கு இந்தக் சி.டி.,யை தயாரித்திருக்கிறேன் . தமிழகத்தில் பல மாணவர்கள் 12-ம் வகுப்பில் மருத்துவப்படிப்புக்குத் தேவையான அறிவியல் பாடத்தில், அதிக மதிப்பெண் எடுத்துவருகின்றனர். ஆனால், அவர்களுக்கு நீட் தேர்வு பற்றி புரிதல் ஏற்படவில்லை. எனவேதான், மாணவர்கள்  நீட் தேர்வை எதிர்கொள்ள, அவர்கள் தயாராகவேண்டிய முறையை பவர் பாய்ன்ட் மூலமடெளிமையாகப் புரியும் வகையில் தயாரித்துள்ளேன் . 

" எப்போது விண்ணப்பிக்க வேண்டும், எப்படி விண்ணபிக்க வேண்டும், விண்ணப்பம் எங்கு கிடைக்கும், கேள்வி முறை , மாதிரி வினாக்கள் , பாடங்களின் வெயிட்டேஜ் , தேர்வுக்குத் தயாராகும் விதம், தேர்வுக் கட்டணம், வயது வரம்பு , பிழைத் திருத்தம்    ஆகியவற்றைத்  தயார்செய்து ஆவணப்படுத்தியுள்ளேன் . மேலும்,   இராணுவ மருத்துவக் கல்லூரி சேர்க்கையும்  நீட் அடிப்படையில் நடைபெறுவதால், நீட் தேர்வு முக்கியத்துவம் பெறுகிறது , மேலும், பாண்டிச்சேரி ஜிப்மர் ,எய்ம்ஸ்  மருத்துவக் கல்லூரி  நடத்தும் நுழைவுத் தேர்வுக்கு விவரங்களையும் இந்தசி.டி பயிற்சி அளிக்கும் . எனவே, நான் தாயரித்துள்ள சி.டி மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்''  என்றார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close