Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம்... அழைப்புவிடுக்கும் அன்புமணி!

நீட் தேர்வில் தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினரும், பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணித்தலைவருமான அன்புமணி ராமதாஸ், வருகின்ற 21-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

நீட்

அவர் விடுத்துள்ள அறிக்கையில் " தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களின் மருத்துவக் கல்விக் கனவை மத்திய அரசும், மாநில அரசும் போட்டிப் போட்டுக்கொண்டு சிதைத்திருக்கின்றன. ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் இழைத்துள்ள துரோகம் சற்றும் மன்னிக்க முடியாததாகும்.

இத்தனை சிக்கலுக்கும் காரணம் நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு கோரும் சட்டங்களுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் அன்புமணி ராமதாஸ்பெறும் விஷயத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வெற்றி பெற தமிழக அரசு தவறிவிட்டதுதான். குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆதரவளிப்பதற்கு இதை ஒரு நிபந்தனையாக முன்வைத்து சாதிக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. ஆனால், ஊழல் வழக்குகளில் இருந்து தப்பிப்பதற்காக, தமிழக மாணவர்களின் நலன்களை மத்திய அரசிடம் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான பினாமி அரசு நிரந்தரமாக அடகு வைத்துவிட்டது.

நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளின் துரோகத்தைக் கண்டித்தும், நீட் தேர்விலிருந்து தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு விலக்கு கோரும் சட்டங்களுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை உடனடியாக பெற்றுத் தரும்படி மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வரும் 21-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை முதல் மாலை வரை சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் எனது தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவிருக்கிறது. நீட் தேர்வு முறையால் பாதிக்கப்பட்ட மாணவர்களும், பெற்றோரும், பொதுமக்களும் இந்த அறவழி உண்ணாவிரதப் போராட்டத்தில் பெருமளவில் பங்கேற்று சமூகநீதிக்காக குரல் கொடுக்க அழைக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார். 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close