Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பெண்களை பதற வைக்கும் மதுரை நான்கு வழிச்சாலை!

மதுரைக்கு அருகிலுள்ள நான்கு வழிசாலைகளில் டூவீலரில் செல்லும் தம்பதிகள், காதலர்கள் அல்லது அண்ணன், தங்கை போன்றவர்களை வழிமறித்து பொருளைக் கொள்ளையடிப்பதிலும் பெண்களை பாலியல் துன்புறுத்துவதிலும் சில கும்பல்கள் ஈடுபட்டு வருவது வாடிக்கையாகி வருகிறது. அதிகமான வாகனப் போக்குவரத்தும், காவல்துறை கண்காணிப்பும் எப்போதுமுள்ள இந்தச் சாலைகளில் பெண்களுக்கு எதிராக நடந்துவரும் சம்பவங்களைப் பார்த்து மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சில நாள்களுக்குமுன்  மதுரையைச் சேர்ந்த பெண்மணி, மேலூர் பகுதியில் துணி வியாபாரம் முடித்துவிட்டு தன் தம்பியுடன் டூவீலரில் மதுரைக்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது தெற்குத்தெரு அருகே இவர்களின் டூவீலரை ஐந்துபேர் மறித்துள்ளனர். தம்பியை அடித்துப் போட்டுவிட்டு, அப்பெண்ணை அருகிலுள்ள காட்டுப்பக்கம் தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அவர்களிடமிருந்து தப்பி வந்த அப்பெண், மேலூர் மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீஸின் துரித நடவடிக்கையால் தெற்குத்தெருவைச் சேர்ந்த பாலாண்டி, சதீஸ்குமார், அன்பு, கார்த்திகேயன், கவியரசன் ஆகியோரைக் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் துணிந்து போலீஸில் புகார் கொடுத்ததால் உடனே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பலர் புகார் கொடுப்பதில்லை. 

கடந்த மாதம் திருப்பரங்குன்றம் அருகிலுள்ள நான்கு வழிச்சாலையில் டூவீலரை நிறுத்தி பேசிக்கொண்டிருந்த காதல்ஜோடியை நெருங்கிய ரவுடிக் கும்பல், காதலனை அடித்துப் போட்டுவிட்டு, பெண்ணைத் தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பெண்ணின் அலறல்  கேட்டு அப்பகுதி இளைஞர்கள் திரண்டுவந்து அப்பெண்ணையும் காதலனையும் காப்பற்றினார்கள். பின்பு போலீஸார் வரவழைக்கப்பட்டு, மூன்று ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.  அந்தப் பெண்ணின் எதிர்காலம் பாழாகிவிடக்கூடாது என்பதால், மிகவும் ஜாக்கிரதையாக அந்த  வழக்கை போலீஸ் கையாண்டது.

மதுரையிலிருந்து சென்னை செல்லும் நான்கு வழிச்சாலையிலும், பெங்களூரு செல்லும் நான்கு வழிச்சாலையிலும் இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடப்பதாகச் சொல்கிறார்கள். மது, கஞ்சா போன்ற போதைப்பொருள்களை உட்கொள்ளும் இளைஞர்களும், ரவுடிகளும் வெறி பிடித்துப்போய் இதுபோன்ற காரியங்களில் ஈடுபட்டுவருவதாக சொல்லப்படுகிறது. பாதிக்கப்படும் பெண்கள் போலீஸுக்குப் புகார் கொடுப்பதில்லை என்பதால், கொடூரர்கள் அதிகரித்து விட்டதாகச் சொல்கிறார்கள். மேலூர் சம்பவத்துக்குப் பிறகு நான்கு வழிச்சாலைகளில் போலீஸ் கண்காணிப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close