Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சாதியிலதான் பாகுபாடுனா... சம்பளத்திலுமா? கொதிக்கும் துப்புரவுத் தொழிலாளர்கள்

சிவகங்கை மாவட்டம் காளையார்கோயில் ஊராட்சி துப்புரவுத் தொழிலாளர்கள் கடந்த பத்து நாள்களாக துப்புரவு பணி செய்யாமல் போராட்டம் நடத்தி வந்தார்கள். ஜூன் மாதம் 20 துப்புரவுத் தொழிலாளர்கள் உபகரணங்கள் வேண்டியும் சம்பள உயர்வு வேண்டியும் போராட்டம் நடத்தினார்கள். அப்போது காளையார்கோவில் வட்டார வளர்ச்சி அதிகாரி பேச்சுவார்த்தை நடத்தி இரண்டு வாரங்களுக்குள் கோரிக்கைகள் சரிசெய்து கொடுக்கப்படும் என வாக்குறுதி கொடுத்தார். கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத நிலையில், மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கைகளை முன்வைத்தனர்.


இந்தப் பேரூராட்சியில் 22 துப்புரவுத் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இதில் ஏழு பேர் மட்டுமே நிரந்தரப் பணியாளர்கள். மற்றவர்கள் எல்லாம் தினக்கூலித் தொழிலாளர்கள். எங்களுக்கு மாதச் சம்பளம் ரூபாய் 2040 வழங்குகிறார்கள். குப்பை அள்ளுவதற்கு வண்டி கிடையாது. நாங்கள் அட்டைப்பெட்டி வைத்துதான் குப்பைகளை அள்ளுகிறோம். எங்களுக்கான உபகரணங்கள் கையுறை கவச உடை போன்றவைகள் எதுவுமே வழங்குவது இல்லை. சம்பளம் உயர்த்திக் கேட்டால் அரசாணை கொண்டு வாங்கனு சொல்லுறாங்க. வார விடுமுறை இல்லை. எந்தச் சலுகைகளும் கிடையாது. எங்களையும் நிரந்தரப் பணியாளர்களாக மாற்றனும். இந்தச் சம்பளத்தை வைத்து எப்படி குடும்பத்தை நடத்த முடியும் .

இப்ப ஜிஎஸ்டி வரினால விலைவாசி உயர்ந்து போச்சு. எதுவுமே வாங்க முடியல. எங்க பிள்ளைகளை எப்படி படிக்க வைக்க முடியும் . வளர்க்க முடியும். எங்களுக்கு வழங்கும் சம்பளம் எந்த மூலைக்கு காணும். தினக்கூலி மற்ற துறைகளாக இருந்தால் ரூபாய் 420. ஆனால் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு மட்டும் ரூ.200 ஏன் இந்த பாரபட்சம். சாதியிலதான் பாகுபாடுனா!  சம்பளத்திலும் பாகுபாடு காட்டுறாங்க! அதான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்கள் துப்புரவுத் தொழிலாளர்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close