Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஏரியை மீட்கக்கோரிய இளைஞர்கள்... அரசியல்வாதிகளுக்கு ஆட்டம்காட்டிய தாசில்தார்!

அரியலூர் மாவட்டத்தில் காணாமல் போன இரண்டு ஏரிகளை, அதிகாரிகளின் முயற்சியால் கண்டுபிடித்துத் தூர் வாரியிருக்கிறார்கள். இது இரண்டுமே இளைஞர்கள் முயற்சியால் நடந்தது என்பது கூடுதல் சிறப்பு. அதிகாரிகளைப் பாராட்டி இளைஞர்கள் வாட்ஸ்அப்பில் குறுஞ்செய்திகளை அதிக அளவில் ஷேர் செய்துவருகிறார்கள். 

ஜெயங்கொண்டம் அருகேயுள்ள குருவாலப்பர்கோயில் அருகில்,  இடைக்கட்டு கிராமத்தில் அமைந்துள்ளது புத்தேரி ஏரி. ராஜேந்திர சோழன் வெட்டிய பொன்னேரியிலிருந்து நீர்வரத்து அதிக அளவில் வந்ததால், இந்த ஏரி தூர்ந்துபோய் கட்டாந்தரையாக மாறியிருந்தது. புத்தூர் ஏரி பயன்பாட்டில் இருந்தபோது, 500 ஏக்கருக்கும் மேல் பாசன வசதிபெற்றது. கட்சிக்காரர்கள் முதல் பொது மக்கள் வரை இந்த ஏரியை ஆக்கிரமிப்புசெய்து விவசாயம் செய்துவந்தனர். இதனால் ஏரி, காலபோக்கில் விவசாய நிலமாக மாறி, கட்சிக்காரர்களின் கட்டுப்பாட்டில் வந்தது.

அந்தப் பகுதி இளைஞர்கள், ஜெயங்கொண்டம் தாசில்தார் திருமாறனிடம் ஏரியைக் கண்டுபிடித்துத் தாருங்கள் என மனு கொடுத்தனர். அதன் பிறகு, தாசில்தார் தலைமையில் குழு அமைத்து, ஏரியைக் கண்டுபிடித்து நில அளவையாளர்களைக்கொண்டு அளவீடு செய்யப்பட்டது. மேலும், அந்தப் பகுதியை பொக்லைன் இயந்திரத்தைக்கொண்டு, அளவீடு செய்யப்பட்ட இடத்தில் அணையை பலப்படுத்தி, தூர் வாரி ஆழப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பா.ம.க. மற்றும் தி.மு.க-வினர் முற்றுகையிட்டனர்.

அப்போது தாசில்தார், "நீங்கள் ஏரியையே ஆக்கிரமித்து உள்ளீர்கள். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்காதீர்கள். இடைஞ்சல் செய்தால் உங்கள் மீது வழக்கு போடுவேன்" என்று கூறியதும், கட்சிக்காரார்கள் எந்த குறுக்கீடும் செய்யாமல் ஒதுங்கிக்கொண்டார்கள். பின்பு, ஏரியை ஆழப்படுத்தும் பணியைத் தொடங்கிவைத்தார். இது, அரியலூர் மாவட்டத்தில் காணாமல் போன ஏரிகளில் இரண்டாவதாகக் கண்டுபிடிக்கப்பட்ட ஏரியாகும். கடந்த ஆண்டு, தண்டலை கிராமத்தில் அப்போதைய மாவட்ட ஆட்சியர் சரவணவேல்ராஜ், மங்கலம் ஏரி  என்ற ஏரியைக் கண்டுபிடித்துத்  தூர் வாரினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close