Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சிறையில் சசிகலா எப்படி இருக்கிறார்..? விளக்கம் சொல்கிறார் டி.டி.வி.தினகரன்

'சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, நட்சத்திர ஓட்டலில் தங்குவதுபோல சொகுசு வாழ்க்கை வாழ்கிறார்; ஷாப்பிங் செல்கிறார். இந்த வசதிகளைப் பெறுவதற்கு அவர் 2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்துள்ளார்' என்று கடந்த சில தினங்களாக  அனல் பறக்கும் விவாதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. இந்தக் குற்றச்சாட்டுகளைச் சொன்ன போலீஸ் அதிகாரி ரூபா, இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், டி.டி.வி.தினகரன் சென்னையில் இன்று (ஜூலை 19-ம் தேதி) நிருபர்களைச் சந்தித்தார். 

அப்போது பேசிய அவர், ''கர்நாடகாவில், ஏதோ துறை அதிகாரிகளோடு உள்ள பிரச்னைகளில் அவர்கள் ஒருவருக்கு எதிராக ஒருவர் செயல்படுவதை எங்கள் எதிரிகள் அரசியலாக்கிப் பார்க்கிறார்கள். சிறையில் இருப்பவர்களைத் தேவையில்லாமல் ஏன் வம்புக்கு இழுக்கிறார்கள்?  அவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது; இவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது என்று சொல்கிறார்களே... அதற்கு ஆதாரம் இருக்கிறதா? இந்தப் பிரச்னையில் விசாரணை முடிவில் பதில் சொல்லலாம் என்று அமைதியாக இருந்தேன். ஆனால், என்னையும் தொடர்புபடுத்தி இப்போது செய்திகள் வருவதால் பதில் சொல்லவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 

டிடிவிதினகரன்

நான் சென்னை சிறையிலும் இருந்திருக்கிறேன். திகார் ஜெயிலிலும் இருந்திருக்கிறேன். தமிழக சிறைகளில்  6 மணிக்குள் அவரவர் அறைக்குள் சென்றுவிட வேண்டும். 6 மணிக்கு மேல் ஜாமீன்  உத்தரவு வந்தாலும் வெளியே விடமாட்டார்கள். ஆனால், டெல்லியில் இரவு 8 மணிக்கு மேல்தான் வெளியே விடுகிறார்கள். திகார் ஜெயிலில் எனக்கு டிவி தந்தார்கள். நியூஸ் பேப்பர் தந்தார்கள். எனவே, ஒவ்வொரு மாநில ஜெயிலிலும் அதற்கு என்று தனி விதிகள் உள்ளன. அதன்படிதான் சிறைத்துறை இயக்கும். கர்நாடகாவில், காங்கிரஸ் அரசு உள்ளது. எங்களுக்கும் அவர்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. அடுத்த ஆண்டு கர்நாடக சட்டமன்றத் தேர்தல் வர இருக்கிறது. அதற்கு அங்கே அரசியல் ஸ்டன்ட் நடந்துகொண்டிருக்கிறது என்றுதான் சொல்லவேண்டியது இருக்கிறது.

 சிறையில் சசிகலா யூனிஃபார்ம் அணியவில்லை என்று எல்லாம் விபரம் அறியாமல் பேசுகிறார்கள். சசிகலாவுக்கு 4 ஆண்டுகள் சாதாரண  தண்டனைதான் கொடுக்கப்பட்டுள்ளது. அதனால்தான் அவர் யூனிஃபார்ம் அணியவில்லை. சிறை அதிகாரிகள் அனுமதியோடுதான் சாதாரண உடையில் இருக்கிறார். சசிகலா இருக்கும் சிறையில், மற்ற கைதிகளுக்கு என்ன சலுகைகள் தரப்படுகிறதோ அதுதான் சசிகலாவுக்கும் தரப்பட்டுள்ளது. சசிகலா ஷாப்பிங் போனதாகத் தவறாக செய்தி போடுகிறார்கள். நாளை (ஜூலை 20-ம் தேதி) நான் பெங்களூரு செல்கிறென். எங்கள் உறவினர்களைப் பார்க்க நாங்கள் போகக்கூடாதா? எல்லாருக்கும் குடும்பம் இருக்கிறது. பிரச்னைகள் இருக்கிறது. அதைப் புரிந்துகொண்டு ஒவ்வொருவரும் செயல்பட வேண்டும்.

சசிகலா

பெங்களூரு சிறையில் 15 நாள்களுக்கு ஒரு தடவைதான் அவர்களைப் பார்க்க அனுமதி உண்டு. நாங்கள் பார்க்கச் செல்லும்போது, எங்களை கால் மணி நேரம் காத்திருக்க வைத்துதான் உள்ளே அனுப்புவார்கள். உள்ளே சென்ற பிறகு, அரை மணி நேரம் கழித்துதான் சசிகலாவை அழைத்து வருவார்கள். ஒரு மணி நேரம் அவரை பார்ப்பதே அரிது. நானும் ஐந்தாறு தடவை அங்கு சென்றிருக்கிறேன். அரை மணி நேரத்துக்கு மேல் நான் அவரை  பார்த்தது இல்லை. சிறைத்துறை விதிகளின்படி என்ன செய்ய முடியுமோ, அதைத்தான் அவர்கள் செய்கிறார்கள்'' என்று சொன்னார். 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close