Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

''20 நாள் அசெம்ளி எப்படி நடந்தது..?''- ஸ்டாலின் சொல்லும் பதில் இதுதான்..!

தமிழக சட்டமன்ற நடவடிக்கைகள்குறித்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் எழுதியுள்ளார். அதில், ''கொளத்தூர் தொகுதியில் துணை மின் நிலையம் அமைப்பது தொடர்பாக சிறப்புக் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்து பேசினேன். பின்னர், பொதுத்துறை, மாநில சட்டமன்றம், ஆளுநர் மற்றும் அமைச்சரவை, நிதித்துறை, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை, திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள்துறை, ஓய்வூதியங்கள் ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கை விவாதங்களில் பங்கேற்று பல பிரச்னைகளை எடுத்துரைத்தேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

 

ஸ்டாலின்

மேலும் ஸ்டாலின் கூறுகையில், ''நிதிநிலை அறிக்கைக்குப் பிறகு, ஏறத்தாழ மூன்று மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், ‘ஆறிப்போன கஞ்சி, பழங்கஞ்சி’ என்ற பழமொழிக்கேற்ப 14.06.2107 முதல் மானியக் கோரிக்கைகள் ஒவ்வொன்றாக அவையில் நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன. பேரவை இதுவரை, 20 நாள்களைக் கடந்து தொடர்ந்து நடந்துவருகிறது. ‘திரும்பிப் பார், முன்னேறு’ என்று பாவேந்தர் எடுத்துச் சொல்லியிருக்கிறார். ஆக, இந்த 20 நாள்களில் அவையில் நடந்தது என்ன? அதனால் மக்களுக்கு ஏற்படவிருக்கும் நன்மைகள் என்ன? திரும்பிப் பார்த்து சிந்தித்தால் வெறுமைதான் மிஞ்சுகிறது. ‘அத்திப்பழத்தைப் பிட்டால் அத்தனையும் சொத்தை’ என்ற பழமொழியைப் போலதான் இருக்கிறது. 

குட்கா பவுடர் விற்கப்படுகிறதென ஆதாரங்கள் எங்களிடம் இருக்கிறது. ஒரு பெண், போதைப் பொருள்கள் விற்கும் புகைப்படம் மட்டுமல்லாமல், சிறு சிறு குழந்தைகளே விற்கும் காட்சிகள் எல்லாம் இருக்கின்றன. இவ்வளவு ஆதாரங்களையும் கையில் வைத்துக்கொண்டு சட்டமன்றத்தில் பேச முயன்றபோது, சபாநாயகர் அவர்கள் எங்களுக்கு பேச அனுமதி மறுத்துவிட்டார். தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள், சென்னை மாநகர் முழுவதும் விற்கப்படுவதை ஆதராங்களோடு சட்டமன்றத்தில் எடுத்துக் காட்டினேன். அதுகுறித்து சபாநாயகர் பேச அனுமதி மறுத்தது மட்டுமல்லாமல், உரிமை மீறல் பிரச்னைக்கு அனுப்பி வைக்கப்படும் என அறிவித்ததைக் கண்டித்து வெளிநடப்பு செய்தோம்.

ஸ்டாலின்

அதேபோல, சட்டமன்ற உறுப்பினர்களுக்கான மாதச் சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது பற்றி என்னுடைய கருத்து என்ன என்றார்கள். அவர்களிடத்தில், அதை நாங்கள் வரவேற்கவும் இல்லை, மகிழ்ச்சியாகவும் எடுத்துக்கொள்ளவில்லை. ஏனெனில், நாட்டில் எவ்வளவோ பிரச்னைகள் நடந்துகொண்டிருக்கின்றன. நெடுவாசல், கதிராமங்கலம் என மாநிலம் முழுவதும் பிரச்னைகள் நடந்துகொண்டிருக்கின்றன. டெல்லியில்கூட விவசாயிகள் இன்னும் போராடிக்கொண்டிருக்கிறார்கள். ஆகவே, அதை நாங்கள் வரவேற்கத் தயாராக இல்லை என்றேன்'' என்று சொல்லி இருக்கிறார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close