Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'சமூகப் பணியில் ஈடுபடுகிறோம் என்பவர்களுக்கு லட்சங்களில் ஏன் சம்பளம்..?'- டிராஃபிக் ராமசாமி கேள்வி

 

பல்லடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துகொள்வதற்காக, சமூக சேவகர் டிராபிக் ராமசாமி திருப்பூர் வந்திருந்தார்.
நேராக திருப்பூர் வட்டாட்சியர் அலுவலகத்துக்குச் சென்றவர், அங்கு அலுவலகத்தின் முகப்புப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த இரண்டு பேனர்களை உடனே அகற்றுமாறு வட்டாட்சியரிடம் கோரிக்கை வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'தமிழ்நாடு சட்டப்பேரவையில், மக்கள் பிரச்னைகளைப் பற்றி எந்த உறுப்பினரும் பேசுவதே கிடையாது. ஆனால், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு 50,000 ரூபாய் வரை ஊதிய உயர்வை ஏற்றி, 1 லட்சத்து ஐயாயிரமாக அள்ளிக்கொடுத்திருக்கிறார்கள். சமூகப் பணி செய்ய வந்தோம் என்பவர்களுக்கு, லட்சங்களில் எதற்கு சம்பளம் தர வேண்டும். இந்த ஆளும் அ.தி.மு.க. அரசானது, எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா என்ற பெயரில் மக்களின் வரிப்பணத்தை வீணாக்கிக்கொண்டிருக்கிறது. அதேபோல, சட்டமன்ற நடவடிக்கைகளில் கலந்துகொள்வதிலிருந்து கருணாநிதிக்கு விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. அவர், தன்னுடைய சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அடுத்தவருக்காவது வாய்ப்பைத் தரலாம்.
மேலும், கதிராமங்கலம் சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்ட நபர்கள் அனைவரையும் வரும் 22-ம் தேதிக்குள் இந்த அரசு விடுதலை செய்ய வேண்டும். அதுமட்டும் நடக்காவிடில், தஞ்சை நீதிமன்றம் அல்லது தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு முற்றுகை போராட்டம் நடத்துவேன். கைதுசெய்தவர்களை விடுவிப்பது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கும் தொடுப்பேன்' என்றார்.

 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close