Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

போதைக்கு அடிமையான, சவுதியின் முன்னாள் பட்டத்து இளவரசர்! வீட்டுச் சிறையில்...

வுதி அரேபிய பட்டத்து இளரவரசர் முகமது பின் நயீப் (வயது 57) கடந்த ஜூன் 21-ம் தேதி பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

சவுதி மன்னர் சல்மானின் மகன் முகமது பின் சல்மான் பட்டத்து இளவரசராக நியமிக்கப்பட்டுள்ளார். போதை மருந்து முற்றிலும் தடை செய்யப்பட்ட நாடுகளில் சவுதியும் ஒன்று. அப்படியிருக்க, பட்டத்து இளவரர் முகமது பின் நயீப், போதை மருந்துக்கு அடிமையாகியிருந்ததாகச் சொல்லப்படுகிறது. 

பதவி இழந்த சவுதி பட்டத்து இளவரசர்

மெக்காவில் உள்ள அரண்மைனையில், முகமது பின் நயீப்பை சவுதி மன்னர் சல்மான் நேரடியாகச் சந்தித்துள்ளார். அப்போது, ''போதை மருந்து உட்கொள்வதை நிறுத்தவில்லை; சிகிச்சை மேற்கொள்ள வலியுறுத்தியும் சிகிச்சை பெறவில்லை. உங்கள் இடத்தில் வேறு ஒருவரைக் கொண்டு வரப்போகிறேன்'' என அவரிடம் கூறியுள்ளார். பின்னர், அரண்மனையிலேயே பட்டத்து இளவரசர் சிறை வைக்கப்பட்டு பாதுகாவலர்கள் மாற்றப்பட்டுள்ளனர். செல்போன்கூட அவரிடமிருந்து பறிக்கப்பட்டது. 

பின்னர் நடந்த கவுன்சில் கூட்டத்தில், முகமது பின் நயீப் அதிகாரபூர்வமாகப் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டார். மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள், அவரின் பதவி நீக்கத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். பட்டத்து இளவரசராக சல்மானின் மகன் முகமது பின் சல்மான் நியமிக்கப்பட்டார்.

பதவி இழந்த இளவரசர் முகமது பின் நயீப்பை, ஸ்விட்சர்லாந்துக்கு சிகிச்சைக்குக் கொண்டுசெல்ல வாய்ப்பிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அவரைப் பற்றிய எந்த முடிவையும் மன்னர் சல்மானும் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுமே எடுப்பார்கள். தனிப்பட்ட முடிவுகளைக் கூட இனிமேல் அவரால் எடுக்க முடியாது. 

இப்போதுவரை, குடும்ப உறுப்பினர்களைத் தவிர வேறு யாரையும் சந்திக்க அவர் அனுமதிக்கப்படவில்லை. வயதான தாயாரைச் சந்திக்க மட்டுமே முகமது பின் நயீப், புதிய பாதுகாவலர்களுடன் அரண்மைனையை விட்டு வெளியே வர அனுமதிக்கப்படுகிறார். இவர், சவுதியின் முதல் மன்னர் கிங் அபுலாசிஸின் பேரன்; மன்னர் சல்மானுக்கு மருமகன் முறை!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close