Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நெதர்லாந்துக்கு எதிரான இரண்டாவது போட்டியிலும் யு.ஏ.இ வெற்றி! #UAEvsNED

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் - நெதர்லாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நெதர்லாந்தில் நடைபெற்று வருகிறது. இரு அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டியில் யு.ஏ.இ அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி நேற்று நடைபெற்றது. 

டாஸ் வென்ற நெதர்லாந்து அணி கேப்டன் போரன் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். தொடக்க ஆட்டக்காரர்கள் பரேசி (34), மைபர்க் (39) ஆகியோர் முதல் விக்கெட்டிற்கு 70 ரன்கள் சேர்த்தனர். பின்னர் விளையாடிய பென் கூப்பர் (47), ஜூல்பிகர் (31) ஆகியோர் ஓரளவுக்குத் தாக்குப்பிடிக்க, 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 239 ரன்கள் எடுத்தது நெதர்லாந்து. யு.ஏ.இ பவுலர் சைமன் அன்வர் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ரோஹன் முஸ்தபா - யு.ஏ.இ கிரிக்கெட்

240 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய யு.ஏ.இ கேப்டன் ரோஹன் முஸ்தபாவின் (58) அரைசதம் மற்றும் குலாம் (37), ரமீஜ் (44), உஸ்மான் (42) ஆகியோரின் சிறப்பான பங்களிப்பால் 48.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 240 ரன்கள் எடுத்து, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று தொடரைக் கைப்பற்றியது.  இரு அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று மாலை தொடங்குகிறது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close