Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

27 லட்சம் கட்டடங்களுக்கு ஆதாரைப் போல `அடையாள எண்' 

மனுஷனுக்கும், மாடுகளுக்கும் ஆதார் எண் வழங்கியதைப்போல, இப்போது கட்டடங்களுக்கும் ஆதார் போன்ற அடையாள எண்ணை வழங்க முன்வந்துள்ளது மும்பை அரசு. 

அடையாள எண், மும்பை


பசு மாடுகள் கடத்தப்பட்டு, கொல்லப்படுவதைத் தடுக்கும் வகையில், அவற்றுக்கும் ஆதார் எண் போன்ற அடையாள எண் வழங்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன. இதனையடுத்து, இந்தியா முழுவதும் உள்ள 8 கோடி மாடுகளுக்கும் ஆதார் கார்டு வழங்க இருக்கிறது அரசு. இந்த நிலையில், மும்பை மாநகராட்சி, நகரின் கட்டமைப்புகளுக்கு தனிப்பட்ட அடையாள எண்களை வெளியிடுவதற்கான செயல்முறையைத் தொடங்கியுள்ளது. 

ஒவ்வொரு கட்டடத்தின் நுழைவு மற்றும் அறிவிப்பு பலகையில் 15 இலக்க அடையாள எண் கொண்ட ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட உள்ளது. மும்பையில் சொத்து வரி பதிவுகளில் பதிவு செய்யப்பட்ட 27 லட்சம் கட்டடங்களுக்கு ஸ்டிக்கர்கள் வழங்கப்படும். அரசாங்க சேவைகள் எளிதாக வழங்குவதற்காகவும், கட்டடங்களை அடையாளப்படுத்துவதற்காகவும் இந்த நடைமுறை கையாளப்பட உள்ளது. இந்த 15 இலக்க எண் ஸ்டிக்கரில் வார்டு எண், சொத்து வரி பிரிவின் எண், கட்டடத்தில் உள்ள குடியிருப்புகளின் எண்ணிக்கை மற்றும் அருகில் உள்ள கட்டட எண் ஆகியவை உள்ளடங்கி இருக்கும். 

`கட்டடங்களுக்கும் ஆதார் எண் போன்ற அடையாள எண் வழங்குவது, சரியாக மற்றும் எளிதாகக் கட்டடங்களை அடையாளம் காண்பதற்கு உதவும். அதேநேரத்தில் அதிகாரிகளுக்கும், ஒரு காலனியில் குடியிருப்பவர்கள் தங்களது வரிப் பணத்தை செலுத்தியுள்ளார்களா என்பதை எளிதாகத் தெரிந்துகொள்ள உதவும் என்கின்றனர்'.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close