Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அங்கன்வாடி மையங்களுக்கு 8 மாதங்களில் கழிப்பறை வசதிகள் செய்து தர உத்தரவு !

 மதுரையைச் சேர்ந்த முகமது யூனிஸ் ராஜா உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அதில், குழந்தைகளின் ஆரம்ப கால வளர்ச்சியே அவர்களின் ஆளுமையைத் தீர்மானிக்கும் என்பதால், அவர்களின் மன, உடல், அறிவு சார் வளர்ச்சியின் ஆரோக்கியமான தொடக்கத்துக்காக அங்கன்வாடி மையங்கள் அமைக்கப்பட்டன. ஆனால், அவற்றில் குழந்தைகளின் வளர்ச்சிக்குத் தேவையான வசதிகள் வழங்கப்படுவதில்லை. பெரும்பாலான அங்கன்வாடிகளில் தண்ணீர் வசதியுடன்கூடிய கழிவறை வசதி, மின்வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததும், அதனால் குழந்தைகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாவதும் சிலசமூக நல ஆய்வுகளில்  தெரியவந்துள்ளது. எனவே, பாதுகாப்புடன் கூடிய கட்டடங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துதர உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தார். 

madurai hc

இந்த வழக்கு நீதிபதிகள் செல்வம், ஆதிநாதன் அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது அரசு தரப்பு அறிக்கையைப் பார்த்தபின் அதை மறுத்து நீதிபதிகள் 8 மாதங்களில் அனைத்து அங்கன்வாடிகளிலும், கழிப்பறை வசதியை நிறைவேற்ற வேண்டும் எனத் தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர் .

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close