Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அழிவின் விளிம்பில் நாவல் பழங்கள்..! முடிந்தவரை ருசிப்போம்

நாவல் பழங்கள்

ஊர்தோறும் உயர்ரக ஒட்டுமுறையில் விளைவிக்கப்படும் பளபளப்பான நாவல் பழங்கள் விறுவிறுப்பாக விற்பனையாகின்றன. ஆனால், உண்மையில் அந்த நாவல் பழங்களுக்கு மருத்துவகுணங்கள் முழுமையாக கொண்டதா என்றால் அது கேள்விக்குறிதான். இவற்றிற்கு திடீரென தற்போது சந்தைக்கு வந்ததற்கு பழங்காலம்தொட்டு இயற்கையான முறையில் வளர்ந்த நாட்டு நாவல் மரங்கள் மெல்ல அழிந்ததுதான் காரணம்.  குறிப்பாக வெண்நாவல் மரங்களின் எண்ணிக்கை குறைந்து அரிதாகிவிட்டது.  நாகை அருகே தெற்குபொய்கைநல்லூரில் இருந்த மூன்று வெண்நாவல் மரங்கள் சமீபத்தில் செங்கள் சூலைக்கு விறகுக்காக வெட்டப்பட்ட கொடுமையும் நடந்திருக்கிறது. 

நாகை அருகேயுள்ள திருநாவலூர், திருச்சி அருகேயுள்ள திருவானைக்காவல் போன்ற ஊர்களில் நாவல் மரங்கள் அங்குள்ள கோயில்களில் தலவிருட்சமாக போற்றப்படுகின்றன.  வெண்நாவல், கருநாவல், கொடிநாவல், குழிநாவல், சம்புநாவல் போன்ற பலவகை நாவல் மரங்கள் தமிழகத்தில் நிறைந்திருந்தன.  இந்த நாவல் மரங்கள் ஆற்றங்கரை ஓரங்களிலும், கடற்கரை ஓரங்களிலும் வளரும் தன்மை கொண்டவை.  ஓவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் மருத்துவகுணம் கொண்டதாகும்.  ஆகஸ்ட் மாதத்தில் பூத்துக்குலுங்கி, அக்டோபர், செப்டம்பர் மாதங்களில் பழுத்துக்கொட்டும்.  ஊட்டச்சத்து, மாவுசத்து, நார்ச்சத்து, பல்வகை விட்டமின் தாதுஉப்புகள் நிறைந்த இப்பழங்கள் பசியை தூண்டும் இயல்புடையன.  ரத்த விருத்தியை உண்டாக்கக்கூடியது.  சிறுநீரக கோளாரை அகற்றக்கூடியது.  

நாவல்

நாவர்விதை சூரணமும், நாவல்பட்டை சாரும் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் சிறந்த மருந்தாகும்.  நாவர்பட்டையை அரைத்து, குழைத்து சூடாக்கி தடவினால் அடிப்பட்ட வீக்கம், கட்டிகள் போன்ற நோய்கள் குணமாகும்.  மேலும், இப்பழத்தின் சாறு பெண்களுக்கு ஏற்படும் பல்வேறு நோய்களை போக்கும்.  

நாவல் மரங்களில் காட்டு நாவல் மரம் என்றொரு வகை உண்டு. இதை சைஜீசியம் டிராவன்கோரிகம் என்று சொல்கிறார்கள். இந்த வகை மரங்கள் அழியும் நிலையில் உள்ள மரங்களின் பட்டியலில் சில ஆண்டுகளுக்கு முன்பு சேர்த்திருக்கிறார்கள். உலக அளவிலே மொத்தம் 260 காட்டு நாவல் மரம்தான் இருக்கிறது என பகீர் புள்ளி விவரங்களையும் அதற்கு ஆதாரமாக தந்திருக்கிறார்கள். இதன் பழம், பட்டை, இலை என அனைத்துமே மருத்துவ குணம் கொண்டிருந்தாலும், அதன் அமைப்பே அதற்கு ஆபத்தாக இருக்கிறது. தேக்கு மரத்துக்கு இருக்கும் அளவுக்கு பதிப்பு இதன் விறகுகளுக்கும் இருப்பதால், இந்த மரத்தை வெட்டி விற்று விடுகிறார்கள்.

முந்தைய காலங்களில் கோயில்களில் மரங்கள் வளர்க்கப்படும். அதைச் சுற்றியும் வனங்களை உருவாக்கியிருந்தார்கள். முக்கியமான மரங்களை தெய்விக காரணம் காட்டி பாதுகாத்து வந்தார்கள். இதுபோன்ற கோயில்கள் இந்தியா முழுவதும் பல லட்சக்கணக்கான அளவில் இருந்தன. அங்கே லட்சக்கணக்காக மரங்கள் பாதுகாக்கப்பட்டன. நாவல் மரமும் அதில் ஒன்றாக இருந்தது. 

அபூர்வ குணமிக்க நாவல் மரங்களை வனத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை அதிகளவில் வளர்க்க அரசு முன்வரவேண்டும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close