Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மோடியின் `மான் கீ பாத்' மூலம் ரூ.10 கோடி வருமானம்!

மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் `மான் கீ பாத்' எனும் வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசுவது வழக்கம். இந்த `மான் கீ பாத்' நிகழ்ச்சி மூலம் அகில இந்திய வானொலி நிலையம் ரூ.10 கோடி வருமானம் ஈட்டியுள்ளது. 

மோடி, மான் கீ பாத்

பிரதமர் மோடி நாட்டு மக்களுடன் உரையாடும் வகையில் `மான் கீ பாத்' நிகழ்ச்சி அக்டோபர் 3, 2014-ல் அகில இந்திய வானொலியில் அறிமுகமானது. இந்த `மான் கீ பாத்' நிகழ்ச்சி ஒவ்வொரு மாதமும் அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பாகி வருகிறது. ஆங்கிலம், இந்தி மட்டுமன்றி மற்ற இந்திய பிராந்திய மொழிகளிலும் இந்த நிகழ்ச்சி மொழிபெயர்க்கப்பட்டு ஒலிபரப்பப்பட்டு வருகிறது. `மான் கீ பாத்' நிகழ்ச்சி, தமிழில் `மனதின் குரல்' என்ற பெயரில் வானொலியில் ஒலிபரப்பப்படுகிறது.

இந்த நிலையில் மக்களவையில் ஜூலை 19-ம் தேதி தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் ராஜ்யவர்த்தன் ராத்தோர் கூறுகையில், கடந்த இரண்டு நிதி ஆண்டுகளில் பிரதமர் மோடியின் `மான் கீ பாத்' நிகழ்ச்சி மூலம் அகில இந்திய வானொலிக்கு 10 கோடி ரூபாய் வருவாயாக கிடைத்துள்ளது' என தெரிவித்துள்ளார். வானொலியில் 10 விநாடிக்கு 2 லட்சம் ரூபாய் என விளம்பர வருவாய் ஆக கிடைத்துள்ளது. அகில இந்திய வானொலி நிலையம் 2016-17-ல் 5.19 கோடி ரூபாயும், இதற்கு முந்தைய நிதி ஆண்டில் 4.78 கோடி ரூபாயும் வருவாயாக ஈட்டியுள்ளது. 
 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close