Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பூரி கடற்கரையைச் சுத்தப்படுத்த வலியுறுத்தும் சுதர்சன் பட்நாயக் மணற்சிற்பம்

சுதர்சன் பட்நாயக்

டிசாவிலுள்ள பூரி கடற்கரையைச் சுத்தப்படுத்த அரசு முன்வர வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக சுதர்சன் பட்நாயக் மணற்சிற்பங்களை வரைந்துள்ளார்.

சுதர்சன் பட்நாயக் இதுவரை 20 லிம்கா ரெக்கார்டு மற்றும் கின்னஸ் சாதனை படைத்தவர். இந்திய அரசின் உயரிய விருதான ‘பத்மஸ்ரீ’ விருது பெற்றவர். ‘சேவ் அவர் பூரி பீச்’ என்ற தலைப்பை வலியுறுத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் பல்வேறு மணற்சிற்பங்களை வரைந்துள்ளார். அதில் பூரிக் கடற்கரையில் தொழிற்சாலைகளிலிருந்து வரும் கழிவுநீர் கலந்து மாசடைந்து வருகிறது. கடற்கரை குப்பை மேடாகக் காட்சி அளிக்கிறது. கடலைச் சுத்தப்படுத்துவது என்பது மிகப்பெரிய பணி. இதை மேற்கொள்வது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. பூரி கடற்கரை என்பது ரத்தம், ஆன்மாவோடு சம்பந்தப்பட்டது. இங்கிருந்துதான் என் பணியைத் தொடங்கினேன். இதைப் பராமரித்துப் பாதுகாப்பது எனது தார்மீகக் கடமை. இந்தக் கடற்கரை சுத்தமாகும் வரை எனது பணிகள் தொடரும் என தெரிவித்துள்ளார். பார்வையாளர்களும் ஒடிசா மக்களும் சுதர்சன் பட்நாயக்குக்கு ஆதரவு கரம் நீட்டியுள்ளனர். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close