Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

குடியரசுத் தலைவர் தேர்தல் – புதுச்சேரியில் அணி மாறி வாக்களித்த எதிர்க்கட்சி எம்எல்ஏ !

குடியரசுத் தலைவர் தேர்தலில் புதுச்சேரியில் எதிர்க்கட்சிகளின் வாக்கு காங்கிரஸ் தரப்புக்கு விழுந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

புதுச்சேரி சட்டமன்றத்துக்கு மொத்தம் 30 எம்எல்ஏ-க்கள். இதில் ஆளும் காங்கிரசுக்கு 15 எம்எல்ஏ-க்களும் அதன் கூட்டணிக் கட்சியான தி.மு.க-வுக்கு 2 எம்எல்ஏ-க்களும்  உள்ளனர். சுயேச்சை எம்எல்ஏ ஒருவரும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளித்து வருகிறார். அதேபோல பிரதான எதிர்க்கட்சியான என்.ஆர் காங்கிரசுக்கு 8 எம்எல்ஏ-க்களும், அதிமுக 'அம்மா’ அணிக்கு 4 எம்எல்ஏ-க்களும் உள்ளனர். குடியரசுத் தலைவர் தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் மற்றும் அ.தி.மு.க., பா.ஜ.க.வுக்கு ஆதரவு தெரிவித்திருந்தன.

இதன்படி காங்கிரஸ் வேட்பாளர் மீரா குமாருக்கு 18 வாக்குகளும், பா.ஜ.க. வேட்பாளரான ராம்நாத் கோவிந்துக்கு 12 வாக்குகளும் பதிவாகியிருக்க வேண்டும். ஆனால், வாக்கு எண்ணிக்கை முடிவடைந்து குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்டுவிட்டார். இந்நிலையில், தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில், புதுச்சேரியில் ராம்கோவிந்துக்கு 10 வாக்குகளும், மீரா குமாருக்கு 19 வாக்குகளும், ஒரு வாக்கு செல்லாத வாக்காகப் பதிவாகியிருப்பதும் தெரிய வந்திருக்கிறது. இதன்மூலம் ராம்நாத் கோவிந்துக்கு எதிர்க்கட்சிகளான என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் அ.தி.மு.க. தரப்பிலிருந்து விழ வேண்டிய இரண்டு வாக்குகளில் ஒரு வாக்கு காங்கிரஸ் தரப்புக்கு விழுந்திருக்கிறது. ஒரு வாக்கு செல்லாத வாக்காக மாறியிருக்கிறது.

எதிர்க்கட்சிகளின் வாக்கு அணி மாறி விழுந்திருப்பதால் புதுச்சேரி அரசியலில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close