Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு மீண்டும் சம்மன்..!?

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு வருமான வரித்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜயபாஸ்கர்

தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் கடந்த ஏப்ரல் 7-ம் தேதி வருமான வரித்துறையினர் தீவிர சோதனை நடத்தினர். அப்போது, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்காக, 89 கோடி ரூபாய் பணம் யார் யாரிடம் வழங்கப்பட்டுள்ளது என்பதற்கான ஆவணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் கூறப்பட்டது. வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதற்காக, மூத்த அமைச்சர்களுக்கு எவ்வளவு பணம் வழங்கப்பட்டது என்பன குறித்த தகவல்கள் அந்த ஆவணங்களில் இடம்பெற்றிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் விஜயபாஸ்கரின் பதவி பறிக்கப்படும் என்றெல்லாம் செய்திகள் வெளியாகின. 

இந்நிலையில், விஜயபாஸ்கருக்கு வருமானவரித் துறையினர் மீண்டும் சம்மன் அனுப்பி இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. இதையடுத்து, நுங்கம்பாக்கத்தில் இருக்கும் வருமானவரித் துறை அலுவலகத்தில் நாளை விஜயபாஸ்கர் ஆஜராவார் என்று கூறப்படுகிறது. 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close