Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜிம்பாப்வே அணிக்குத் திரும்பும் பிரெண்டன் டெய்லர், ஜார்விஸ்!

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தோற்றாலும், அதற்கு முந்தைய ஒருநாள் போட்டித் தொடரை 3-2 என்ற கணக்கில் வென்று வரலாற்றுச் சாதனை படைத்தது, ஜிம்பாப்வே அணி. இந்த வெற்றி, ஜிம்பாவே கிரிக்கெட் ரசிகர்களுக்கு மட்டுமல்ல, அந்த நாட்டின் கிரிக்கெட் நிர்வாகத்துக்கு புத்துணர்வுகொடுத்திருக்கிறது.

டெய்லர் - ஜார்விஸ் - ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி

இதே உத்வேகத்தோடு, ஜிம்பாப்வே அணியின் அடுத்தடுத்த வளர்ச்சியை கணக்கில்கொண்டுள்ள அந்த நாட்டின் கிரிக்கெட் நிர்வாகம், ஜிம்பாப்வே அணியில் விளையாடி பொருளாதாரப் பிரச்னை மற்றும் இன்னபிற அரசியல் பிரச்னைகளால் அணியிலிருந்து வெளியேறிய திறமையான வீரர்களை மீண்டும் அணிக்குள் கொண்டுவரும் முயற்சியை எடுத்திருக்கிறது. முதல் முயற்சியாக, ஜிம்பாப்வே அணியின் நட்சத்திர வீரரும் அதிரடி ஆட்டக்காரருமான பிரெண்டன் டெய்லர் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஜார்விஸ் ஆகிய இருவரிடமும் மீண்டும் ஜிம்பாப்வே  நாட்டுக்குத் திரும்பி, ஜிம்பாப்வே தேசிய அணியில் இணைவதுகுறித்த பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. 

முன்னாள் வீரரும் தற்போதைய பயிற்சியாளருமான ஹீத் ஸ்ட்ரீக் நிர்வாகத்தில் இணைந்துள்ள முன்னாள் வீரர் தைபு, ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் நிர்வாக இயக்குநர் முகுலானி ஆகியோரின் கூட்டு முயற்சியில், இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. தவிர, ஜிம்பாப்வே கிரிக்கெட் வீரர்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு வழிவகை செய்யப்பட்டிருக்கிறது. 

இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரில், ஜிம்பாப்வே வீரர்களின் கூட்டு முயற்சியில் கிடைத்த வரலாற்று வெற்றி, ஜிம்பாப்வே கிரிக்கெட் நிர்வாகத்தின் மீதான அதிருப்தியிலும் நிர்வாகத்தில் நிகழும் அரசியல்ரீதியான பிரச்னைகளால் வெளியேறிய பல திறமையான வீரர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை உருவாக்கிக்கொடுத்திருக்கிறது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close