Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கண்கலங்கிய தாயார்... நெகிழ்ந்த முகேஷ் அம்பானி! #RILat40

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 40-வது ஆண்டு பொதுக்கூட்டம், தற்போது மும்பையில் நடந்துவருகிறது. இந்தப் பொதுக்கூட்டத்தை, அந்நிறுவனத்தின் சிஇஓ முகேஷ் அம்பானி தனது உரையுடன் தொடங்கிவைத்தார். ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குதாரர்கள் மற்றும் ஊழியர்கள் இந்தப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

ரிலையன்ஸ் கோகிலாபென் (Kokilaben)

ரிலையன்ஸ் நிறுவனத்தின் 40 ஆண்டுகால வளர்ச்சிபற்றி முகேஷ் அம்பானி உரையாற்றும்போது, அவரின் தந்தையும் அந்நிறுவனத்தின் நிறுவனருமான மறைந்த திருபாய் அம்பானி பற்றி நெகிழ்ச்சியாகக் குறிப்பிட்டார். இந்தப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட திருபாய் அம்பானியின் மனைவி கோகிலா பென், அப்போது கண்கலங்கத் தொடங்கினார். கூட்டத்தில் கலந்துகொண்ட பங்குதாரர்கள், ஊழியர்கள் மற்றும் மேடையில் அமர்ந்திருந்த ரிலையன்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்களும் எழுந்து மரியாதை செலுத்தினர். கோகிலா பென், சில நிமிடங்கள் தனது இருக்கையில் நெகிழ்ந்துபோய் இருந்தார். இது, கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவரையும் நெகிழச்செய்தது. தனது தாயார் கண்கலங்குவதைப் பார்த்த ரிலையன்ஸ் நிறுவனத்தின் சிஇஓ முகேஷ் அம்பானி, சில நிமிடங்கள் தனது உரையை நிறுத்திவைத்தார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close