Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'இந்தித் திணிப்பை ஏற்க மாட்டேன்': கன்னையா குமார் பேச்சு!


இந்தியாவைக் காப்போம்! இந்தியாவை மாற்றுவோம்! என்ற கோரிக்கையை வலியுறுத்தி டெல்லி ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தின் மாணவப் பேரவையின் முன்னாள் தலைவர் கன்னையா தலைமையில் கன்னியாகுமரி முதல் பஞ்சாப் ஹூசேனிவாலா வரை பிரசார நெடும்பயணம்  வந்துகொண்டிருக்கிறது. சேலத்தில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் மற்றும் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பாக சேலம் கோட்டையில் பயண வாழ்த்துரை கூட்டம் நடைபெற்றது.

பொதுக்கூட்டம்

மேடையில்...

கன்னையாகுமார் பேச்சு


இதில் சேலம் மாவட்ட மாணவ பெருமன்றத்தின் மாவட்டச் செயலாளர் ரமேஷ், இளைஞர் பெருமன்றத்தின் மாவட்டச் செயலாளர் தினேஷ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் மோகன், முன்னாள் எம்.பி., சுப்பராயன் என பலரும் கலந்துகொண்டனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் மோகன், ''சேலம் மாவட்டத்தில் இருந்து சுப்பராயன், ராஜாஜி என இரண்டு முதல்வர்கள் உருவாகி இருக்கிறார்கள். தற்போது எடப்பாடி பழனிசாமியும் சேலத்தைச் சேர்ந்தவர் முதல்வராக இருக்கிறார். வாய் திறக்காத ஊமையாக இருக்கிறார். அவரால் தமிழ்நாட்டுக்கு ஒரு பயனும் இல்லை'' என்றார்.


அடுத்துப் பேசிய முன்னாள் எம்.பி., சுப்பராயன், ''இங்கு இருக்கும் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மாணவர் கன்னையாகுமார் பிரதமர் மோடியை தூக்கம் இல்லாமல் ஆக்கினார். அதற்காக கன்னையாகுமார் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். மோடியின் செயல்பாடு இந்து மதத்துக்கே எதிரானது. இந்தியாவை சட்டம் ஆளவில்லை. இந்த கலகக் கும்பல் ஆளுகிறது'' என்றார்.


இறுதியாக பேசிய கன்னையாகுமார், '' உங்கள் தாய்மொழியான தமிழில் என்னால் பேச முடியாததால் வருத்தப்படுகிறேன். என் தாய் மொழி இந்தி. ஆனால், இந்தித் திணிப்பை நான் எதிர்க்கிறேன். இந்தியாவில் உள்ள விவசாயிகள் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறார்கள். தினந்தோறும் ஜந்தர்மந்தரில் போராடி வருகிறார்கள். அதைப்பற்றியெல்லாம் மோடி அரசு கண்டுகொள்வதில்லை.
நான் இந்தியில் பேசினேன். உங்களுக்குப் புரியவில்லை. அதன்பிறகு ஆங்கிலத்தில் பேசுகிறேன். இந்தியா வேற்றுமையில் ஒன்றுமை காண்பது தான் சிறப்பு. இந்தியாவில் தமிழ், இந்தி, கன்னடம், தெலுங்கு என பல மொழிகள் இருக்கின்றன. ஆனாலும் நாம் அனைவரும் இந்தியர்கள். இதுதான் இந்தியாவின் அழகு.


ஆனால், மோடி ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாசாரம் என்பதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. சமீபத்தில் இந்தியா முழுவதும் ஜிஎஸ்டி., ஒரே வரி என்று அறிவித்தார்கள். அதேபோல இந்தியா முழுவதும் அனைவருக்கும் ஒரே மருத்துவம், ஒரே கல்வி கொண்டு வர முடியுமா? கொண்டு வர வேண்டும். இதைப்பற்றி மோடி வாய் திறப்பதில்லை.


மோடி இந்து என்ற மதத்தை ஆதரித்து வருகிறார். ஆனால், பணப்பரிமாற்றத்தால் 15 கோடி பேர் வேலை இழந்திருக்கிறார்கள். பல மாணவர்கள் பள்ளிக் கூடங்களிலும், கல்லூரிகளில் இறந்திருக்கிறார்கள். அவர்களும் இந்துக்கள்தான். இந்தியாவில் பலரும் வேலை இல்லாமல் இருக்கிறார்கள். சாதி, மத மோதல் அதிகரித்திருக்கிறது. இந்தியாவுக்கு விடுதலை கேட்கவில்லை. இந்தியாவுக்குள் எங்களுக்கு விடுதலை வேண்டும்'' என்றார்.
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close