Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆறுக்குட்டி எம்.எல்.ஏ-வுக்கு சிக்னல் கொடுத்த அமைச்சர்!

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, தமிழக அரசியலில் அசாதாரண சூழல் நிலவிவருகிறது. குறிப்பாக, ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ், டி.டி.வி என்று மூன்று அணிகளாகத் தற்போது அ.தி.மு.க இயங்கிவருகிறது. குறிப்பாக, சசிகலாவுக்கு எதிராக பன்னீர்செல்வம் போர்க் கொடி எழுப்பிய பிறகு, அவரது அணியில் முதல் ஆளாக வந்து இணைந்தவர், கோவை கவுண்டம்பாளையம் தொகுதி எம்எல்ஏ ஆறுக்குட்டி.

ஓ.எஸ். மணியன்


இந்நிலையில், தற்போது பன்னீர்செல்வத்துக்கு எதிராக போர்க் கொடி எழுப்பியுள்ளார் ஆறுக்குட்டி. ஓ.பி.எஸ் அணியில் தான் புறக்கணிக்கப்பட்டதால், அந்த அணியில் இருந்து விலகுவதாக ஆறுக்குட்டி தெரிவித்துள்ளார். இதனிடையே அவர், முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியில் இணைய இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், பழனிசாமி அணியில் இணைவது குறித்து முடிவு எடுக்கவில்லை என்று ஆறுக்குட்டி கூறியுள்ளார்.

இதனிடையே நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக, அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திருப்பூர் சென்றுள்ளார். அங்கு செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,"எம்எல்ஏ ஆறுக்குட்டி பிரிந்து சென்றபோதே, அவரிடம் பலமுறை தொடர்புகொண்டு பேசியிருந்தேன். ஆறுக்குட்டி எங்களது அணிக்கு வந்தால் மகிழ்ச்சி. ஜவுளி மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்க, மத்திய ஜவுளித்துறை அமைச்சரை சந்திக்க உள்ளேன்" எனக் கூறியுள்ளார். 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close