Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'கமல்ஹாசனை இயக்குவது யார்..?'- கனிமொழி அதிரடி பேட்டி

'கமல்ஹாசனுக்கு தி.மு.க. உதவி செய்ய வேண்டிய எந்த அவசியமும் இல்லை. அவர் சுயமாக செயல்படக்கூடியவர்' என்று மாநிலங்களவை எம்.பி., கனிமொழி கருத்து கூறியுள்ளார். 

தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி., சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறுகையில், ''தமிழக அரசு முற்றிலும் முடங்கி கிடக்கிறது. எம்பிபிஎஸ் கவுன்சலிங் முடிந்த பிறகுதான் ஒவ்வொரு ஆண்டும் பொறியியல் கவுன்சலிங் நடந்து வந்தது. ஆனால், இந்த ஆண்டும் எல்லாமே எதிர்மாறாகவே நடக்கிறது. தமிழக மாணவர்கள் மன உளைச்சலில் உள்ளனர். நீட் தேர்வு  பிர்ச்னையில் தமிழக அமைச்சர்கள், இப்போது பிரதமரை சென்று பார்த்து இருக்கிறார்கள். இவர்கள் இந்த ஆண்டுக்கு மட்டும் விலக்கு கேட்டுள்ளார்களா? அல்லது ‘நீட்’ தேர்வே தமிழகத்துக்கு தேவை இல்லை என்று கேட்டு உள்ளார்களா? என்ற தெளிவான விவரங்கள் இல்லை. எல்லாம் ஏமாற்று வேலையாக இருக்கிறது'' என்றார்.

கனிமொழி

கமல்ஹாசனை தி.மு.க இயக்குகிறதா என்ற கேள்விக்கு, ''யாருடைய தயவையும் நம்பி தி.மு.க இல்லை. இந்த இயக்கத்துக்கு தலைவர்கள் இருக்கிறார்கள்; செயல் தலைவர் இருக்கிறார். கோடிக்கணக்கான தொண்டர்கள் இருக்கிறார்கள். மக்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள். எங்களுக்கு வேறு யாரும் தேவை இல்லை. நடிகர் கமல்ஹாசன் மற்றவர்கள் இயக்கி, இயங்கக் கூடியவர் அல்ல. யாரையும் இயக்கி அதன் மூலம் ஆதாயம் அடைய வேண்டிய நிலை தி.மு.க-வுக்கு இல்லை. கமல்ஹாசனுக்கு தி.மு.க. உதவி செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. அவர் சுயமாக செயல்படக்கூடியவர்" என்று கனிமொழி பதில் அளித்தார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close