Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

திருவாரூர் சேஷபுரீஸ்வரர் கோயிலில் ராகு-கேது பெயர்ச்சி!

திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே திருபாம்புரத்தில் பிரசித்திபெற்ற சேஷபுரீஸ்வரர் கோயில் உள்ளது. இது ராகுவும் கேதுவும் இணைந்து காட்சிதரும் சிறப்புவாய்ந்த தலமாகும். தேவாரப்பாடல்பெற்ற இக்கோயிலில் ராகு-கேது ஏகசரீரமாகி இறைவனை நெஞ்சில் நிறுத்தி வழிபட்டு அருள்பெற்றனர் என்பது புராண வரலாறு. கருவறையில் பாம்புடன்கூடிய லிங்க வடிவமாக இறைவன் காட்சி தர, கோயிலின் ஈசானிய மூலையில் ராகுவும் கேதுவும் தனிச் சந்நிதியில் எழுந்தருளியுள்ளனர்.  

வருகிற 27-ம் தேதி ராகு-கேது பெயர்ச்சி நடைபெற இருப்பதால் லட்சக் கணக்கில் கூடும் பக்தர்களுக்கு குடிநீர், சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகளைக் கோயில் நிர்வாகம் செய்து வருகிறது. 26-ம் தேதி காலை முதல்காலம் விக்னேஷ்வர பூஜையுடன் விழா தொடங்குகிறது. இரவு 7.00 மணிக்கு மகாபுர்ணாகுதி தீபாராதனை நடக்கிறது. 27-ம் காலை இரண்டாம்கால பூஜைகள் தொடங்குகிறது.  காலை 10.00 மணிக்கு பரிகாரஹோமபூஜை, 11.30 மணிக்கு மகாபுர்ணாகுதி, 12.00 மணிக்கு சிறப்பு பால் அபிஷேகம் நடைபெறுகிறது.  மதியம் 12.48 மணிக்கு ராகு பகவான் சிம்ம ராசியிலிருந்து கடக ராசிக்கும், கேது பகவான் கும்ப ராசியிலிருந்து மகர ராசிக்கும் இடம்பெயரும் ராகு-கேது பெயர்ச்சிவிழா நடைபெறுகிறது.  இதைத் தொடர்ந்து 28-ம் தேதி ஏகதின லட்சார்ச்சணையுடன் விழா நிறைவடைகிறது.

 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close