Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'2019 தேர்தலுக்குப் பிறகு யார் பிரதமர் தெரியுமா..?- மம்தாவுக்கு பதிலடி கொடுத்த பா.ஜ.க..! 

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கொல்கத்தாவில் ஜூலை 22-ம் தேதி நடந்த பேரணியில் பேசுகையில், ''மக்கள் பிரச்னைகளுக்காக எதிர்க் கட்சிகள் குரல் கொடுக்கின்றன. ஆனால், நாங்கள் மற்றவர்களை விட அதிகமாகக் குரல் கொடுக்கிறோம். ஆனால், சி.பி.ஐ மூலம் எங்கள் வாயை அடைத்து விட முடியாது. நாங்கள் நல்லவர்களா? கெட்டவர்களா என்று பா.ஜ.க சான்றிதழ் தர வேண்டிய அவசியம் இல்லை. மத்திய அரசை யார் எல்லாம் எதிர்க்கிறார்களோ அவர்கள் மீது வழக்குகள் பாய்கிறது. அவர்கள் மீது சி.பி.ஐ கட்டவிழ்த்து விடப்படுகிறது. இதே போக்கு நீடித்தால், 2019-ம் ஆண்டு  நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் அலுவலகத்தை, பெரியண்ணா காலி செய்துவிட்டு குஜராத்க்கு செல்ல வேண்டியதுதான்'' என்று ஆவேசமாக பேசினார்.

ஜவ்டேகர்

இதற்கு பதில் அளித்து மத்திய மனித வளத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், ''கனவு காண்பது தனிப்பட உரிமை. ஆனாலும், மம்தா கனவு ஒரு நாளும் பலிக்காது. ஏழை எளிய மக்களோடு ஒன்று கலந்துவிட்டர் மோடி. அவரை விமர்சிக்க மம்தாவுக்கு என்னத் தகுதி இருக்கிறது? ஒவ்வொரு நாளும் பா.ஜ.க வலுவடைந்து கொண்டு இருக்கிறது. மக்களை பின்னோக்கி கொண்டு செல்வதே மம்தாவின் இலக்கு. முன்பு, கம்யூனிஸ்டுகள் செய்ததை இப்போது மம்தா செய்கிறார். 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றி பா.ஜ.க-வுக்கு காத்து இருக்கிறது. மோடிதான் பிரதமர் நாற்காலில் அமர்வார். சமூக நல்லிணக்கத்துக்கு குந்தகம் விளைவித்துக் கொண்டு இருக்கும் மம்தாவை அம்மாநில மக்கள் விரைவில் அரசியலை விட்டே விரட்டி அடிப்பார்கள்'' என்று பதிலடி கொடுத்துள்ளார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close