Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு: குளறுபடியை அம்பலமாக்கியது ஆர்.டி.ஐ.!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பிழையே ஏற்படாது என தேர்தல் ஆணையம் கூறிவரும் வேளையில் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது என ஆர்.டி.ஐ. உண்மையை அம்பலப்படுத்தியுள்ளது.

மின்னணு இயந்திரம்

கடந்த பிப்ரவரி மாதம் நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு பல்வேறு எதிர்க்கட்சிகள், 'மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு உள்ளன. யாருக்கு வாக்கு செலுத்தினாலும் பா.ஜ.க.வுக்கு வாக்கு பதிவாகும்படி அது வடிவமைக்கப்பட்டுள்ளது' என்று குற்றம் சாட்டின. மேலும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரியான சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டது. சில கட்சிகள் இதற்கும் ஒருபடி மேலே போய், 'மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு இருக்கும் எனப் பரவலாக புகார்கள் வருவதால், பழையபடி வாக்குச்சீட்டு முறையைப் பயன்படுத்தி தேர்தல் நடத்தப்பட வேண்டும்.' என்றும் தெரிவித்தன.

இந்நிலையில்தான் தேர்தல் கமிஷன், 'மின்னணு வாக்குப்பதிவு இயந்திர முறையில் குறை இருக்கும் என்று சந்தேகிக்கும் கட்சிகள், வாக்குப்பதிவு இயந்திரத்தை சோதனை செய்யலாம். இயந்திரத்தில் எந்தக் கோளாறும் இல்லை’ என ஆணித்தரமாகக் கூறியது. ஆனால், தற்போது ஆர்.டி.ஐ வெளியிட்ட ஒரு தகவல் தேர்தல் ஆணையத்தின் கூற்றை கேள்விக்குறியாக்கியுள்ளது.

சில மாதங்களுக்கு முன்னர் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்த ஒரு உள்ளாட்சித் தேர்தலில் மின்னணு இயந்திரத்தில் சுயேச்சை ஒருவரின் தேங்காய் சின்னத்தில் வாக்களித்தபோது பாரதிய ஜனதாவின் தாமரை சின்னத்தில் வாக்குப் பதிவு செய்யப்பட்டதற்கான சிவப்பு விளக்கு எரிந்துள்ளது. அப்பகுதி மக்கள் புகார் அளித்து பிரச்னையை பெரிதாக்கியதால் அந்தத் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. சமூக ஆர்வலர் ஒருவரின் கேள்வியால் தற்போது மின்னணு இயந்திரத்தின் கோளாறு வெளிப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close