Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ராமநாதபுரத்தில் பாகிஸ்தானியர் கைது!

ராமநாதபுரத்தில், முறையான ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருந்த பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவர், கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ராமநாதபுரத்தில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தானியர்

இலங்கையிலிருந்து படகு வழியாக இந்தியாவுக்குள் நுழைந்த அவரின் பெயர், முகமது யூனிஸ் ( வயது 65). கராச்சியைச் சேர்ந்த இவர், ஏர்வாடியில் உள்ள லாட்ஜில் தங்கியிருந்தபோது, போலீஸார்  கைதுசெய்தனர். இந்தியாவில் தங்குவதற்கான எந்த முறையான ஆவணங்களும் அவரிடம் இல்லை. முகமது யூனிஸிடமிருந்து  3 ஆயிரம் மதிப்புள்ள பாகிஸ்தான் பணம் கைப்பற்றப்பட்டது. போலீஸார் நடத்திய விசாரணையில், போதை மருந்து வாங்குவதற்கு வந்ததாகத் தெரிவித்திருக்கிறார். 

தொடர்ந்து, அவருக்கு போதை மருந்து சப்ளை செய்வதாகக் கூறிய ராமநாதபுரத்தைச் சேர்ந்த இருவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர். பின்னர், பரமக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்செய்து, முகமது யூனிஸை ரிமான்ட் செய்தனர். சென்னை புழல் சிறைக்கு அவர் கொண்டு வரப்பட்டுள்ளார். புழல் சிறையில்தான் வெளிநாட்டினருக்கு என்று தனிச் சிறை வசதி இருக்கிறது. 

முன்னாள்  குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நினைவு மண்டபம் திறப்பு விழா, 27-ம் தேதி நடைபெறவிருக்கிறது.  பிரதமர் மோடி விழாவில் பங்கேற்க உள்ளார். இந்த நிலையில், ராமநாதபுரத்தில் பாகிஸ்தானைச் சேர்ந்தவர் கைதுசெய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close