Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

காஞ்சிபுரத்தில் 9-ம் வகுப்பு சிறுமிக்கு நடந்த சோகம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில், 9-ம் வகுப்புப் படித்து வந்த சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். 

பாலியல் வன்கொடுமை

காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் அருகே ஆலத்தூர் பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவர்  9-ம் வகுப்புப் படித்து வந்தார். இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு சிறுமியின் தாயார் வேலைக்குச் சென்றிருந்தபோது, ஒரு நபர் வீட்டுக்குள் நுழைந்துள்ளார். வீட்டுக்குள் நுழைந்த அவர், அந்தச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதையடுத்து, அந்த நபர் சிறுமியைக் கொலை செய்துவிட்டு தப்பியோடி விட்டார். இதைத்தொடர்ந்து அவரது தாய் வீட்டுக்கு வந்தவுடன், இந்தச் சம்பவத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர், காவல்துறைக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறை, சிறுமியின் உடலை மீட்டு பிரதேப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தது.

காவல்துறை நடத்திய விசாரணையில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக, சிறுமியின் உறவினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close