Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தறிகெட்டு ஓடிய காரால் அதிர்ந்த சென்னை அண்ணாசாலை!

சென்னை அண்ணாசாலையில் தாறுமாறாக வந்த காரால் சாலையில் சென்ற மற்ற வாகன ஓட்டிகள் அதிர்ந்துபோனார்கள். கட்டுப்பாட்டை இழந்த கார், நான்கு வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. காரின் ஓட்டுநரோ தப்பியோடிவிட்டார்.

சென்னை அண்ணாசாலை நந்தனத்தில் இன்று பிற்பகல் 3.15 மணிக்கு கார் ஒன்று வந்துகொண்டிருந்தது. சைதாப்பேட்டையை நோக்கி அதிவேகமாக வந்த கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. தறிகெட்டு வந்த காரை பார்த்த மற்ற வாகன ஓட்டிகள் அதிர்ந்து தங்கள் வாகனங்களை வேகமாக ஓட்டிச்சென்றனர். இருந்தாலும் மின்னல் வேகத்தில் வந்த கார், முதலில் ஆட்டோ மீது மோதியது. பின்னர் மூன்று கார்கள் மீது மோதி விபத்துக்குள்ளாகி நின்றது. காரில் இருந்த ஓட்டுநர் எந்தக் காயமுமின்றி அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

அடுத்தடுத்த விபத்துகளால் அண்ணாசாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து போக்குவரத்தைச் சரி செய்யும் வேலையில் ஈடுபட்டு வருகின்றனர்.

வாகனங்கள் அதிகமாகச் செல்லும் அண்ணாசாலையில் தறிகெட்டு ஓடிய காரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close