Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் நாளை பதவியேற்கிறார்!

ந்தியாவின் 14-வது குடியரசுத் தலைவராக, ராம்நாத் கோவிந்த் நாளை பதவியேற்கிறார்.

ராம்நாத் கோவிந்த்

தற்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் நாளையுடன் முடிவடைகிறது. எனவே, புதிய குடியரசுத்தலைவரைத் தேர்ந்தெடுக்க இந்தியத் தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்தி முடித்துள்ளது. இதன்படி இந்தியா முழுக்க எம்.பி-க்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்கள் அளித்த வாக்குகளில் பாரதிய ஜனதா கூட்டணிக் கட்சிகளின் சார்பில் களமிறங்கிய ராம்நாத் கோவிந்த் அபார வெற்றிபெற்றார். நாளை இந்தியாவின் 14-வது குடியரசுத்தலைவராக ராம்நாத் கோவிந்த் பதவியேற்கிறார். இவருக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜெகதீஷ் சிங் கேஹர் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். குடியரசுத் தலைவர் மாளிகையில் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள், முழு வீச்சில் நடைபெற்றுவருகின்றன. பதவியேற்பு நிகழ்வுகள் முடிந்ததும், ராம்நாத் கோவிந்த் அதிகாரபூர்வமாக தனது குடும்பத்தாருடன் குடியரசுத் தலைவர் மாளிகையில் தங்குவார்.

இதனிடையே தற்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, இன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து வெளியேறுகிறார். டெல்லி ராஜாஜி மார்க் பகுதியில் பிரணாப் முகர்ஜிக்கு 10-ம் எண் கொண்ட அரசு பங்களா ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்காக இந்த இல்லம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் பதவிக்காலம் முடிந்ததும் டாக்டர் அப்துல்கலாம், இந்த இல்லத்தில்தான் தங்கினார். அப்துல்கலாம் மரணமடைந்த பிறகு, இந்த இல்லம் மத்திய அமைச்சர் மகேஷ் சர்மாவுக்கு ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close