Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தண்ணீர் பிரச்னையால் சாதி பிரச்னை ஏற்படும் அபாயம்!

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி தாலுகா, திருவள்ளூர் புதூர் கிராமத்தில் கடந்த மூன்று மாதங்களாகக் குடிதண்ணீர் இல்லாமல் அவதிப்படுவதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்திருக்கிறார்கள்.

பேச்சுவார்த்தையில் தாசில்தார்

அப்பகுதி மக்களிடம் பேசும்போது, ``நாங்கள் எங்க ஊர் பஞ்சாயத்து கிளார்க்கிடம் பல முறை முறையிட்ட போதும், சரி செய்யாமல் நிதிப்பிரச்னை இருப்பதாகப் புதிய தகவல்களைச் சொல்லிவருகிறார். தண்ணீர் பிடிக்க மேல்சாதி மக்கள் இருக்கும் ஏரியாவுக்குப் போனால் சாதி பிரச்னை ஏற்படுகிறது. இந்தப் பிரச்னை வராமல் இருப்பதற்கு எங்கள் ஏரியாவில் உள்ள பைப் லைன் சரி செய்து கொடுப்பதால் தடுக்க முடியும். தாசில்தார் நாகநாதன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, கூடிய விரைவிலேயே இப்பிரச்னை சரி செய்யப்படும் என்று வாக்குறுதி கொடுத்திருக்கிறார்’’ என்றார்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close