Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ராம்நாத் கோவிந்த்தைச் சந்தித்தார் ஓ.பன்னீர்செல்வம்!

ராம்நாத் கோவிந்துடன் பன்னீர்செல்வம்

ந்தியாவின் 14-வது குடியரசுத் தலைவராக, பா.ஜ.க-வைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்த் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில்,  தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து கூறியுள்ளார்.

பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் நிறைவடைவதையடுத்து, ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த
17-ம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற்றது. இதில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில், பீகாரின் முன்னாள் ஆளுநர் ராம்நாத் கோவிந்த்தும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் மீரா குமாரும் போட்டியிட்டனர். இதில், ராம்நாத் கோவிந்த் 4,79,585 வாக்குகளும், மீரா குமார் 2,09,594 வாக்குகளும் பெற்றனர். அதிக வாக்குகள் வித்தியாசத்தில் ராம்நாத் கோவிந்த் வெற்றி பெற்றுள்ளார். தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் இரண்டாவது முறையாகக் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இவர் நாளை பதவி ஏற்கவுள்ளார்.

இந்நிலையில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ராம்நாத் கோவிந்த்தை நேரில் சந்தித்து தன்னுடைய வாழ்த்தைத் தெரிவித்தார். பன்னீர்செல்வம் ஆதரவு எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் ராம்நாத் கோவிந்த்துக்கு வாக்களித்தது குறிப்பிடத்தக்கது. 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close