Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எம்.எல்.ஏ-வை விரட்டியடித்த கிராம மக்கள்!− ஆண்டிபட்டியில் பரபரப்பு

தேனி மாவட்டம், கண்டமனூரில் இன்று மாலை ஆண்டிபட்டி தொகுதி எம்.எல்.ஏ-வும், தேனி மாவட்ட அ.தி.மு.க மாவட்டச் செயலாளருமான தங்கத் தமிழ்ச்செலவன் காரை கிராம மக்கள் முற்றுகையிட்டனர். ஆண்டிபட்டி தொகுதிக்குள் இருக்கும் கண்டமனூர் கிராமத்தின் வாழ்வாதாரம் கால்நடைகளை நம்பியே உள்ளது. மலை மாடுகள், ஆடுகள் என அந்த கிராமத்தின் பொருளாதார ஆதாரமே கால்நடைகள்தான். பருவமழை பொய்த்துப் போனதால், கால்நடைகளுக்குத் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்நிலையில், காடுகளுக்குள் மலை மாடுகளை மேய்க்கக் கூடாது என வனத்துறை தடை விதித்தது மட்டுமல்லாமல், முறைப்படுத்தப்படும் என்று சொல்லியும் இதுவரை நடவடிக்கை இல்லை. கால்நடைகளுக்குத் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில், கிராமத்தில் உள்ள கண்மாயைத் தூர்வாரினால் தண்ணீர் தேக்கிவைக்க முடியும் என்று மாவட்ட நிர்வாகத்திடம் பல முறை முறையிட்டனர் கிராம மக்கள். தனது தொகுதி சட்டமன்ற உறுப்பினரான தங்கத்தமிழ்ச்செல்வனிடமும் பல முறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.

இந்நிலையில், நூறு நாள் வேலைத்திட்டத்தின் மூலம், கிராம மக்கள் அனைவரும் இணைந்து அந்தக் கண்மாயைத் தூர்வாரத் தொடங்கினர். மக்களின் தூர்வாரும் பணி 40 நாள்களைக் கடந்து நடந்து வருகிறது. அந்த வழியாகச் சென்ற எம்.எல்.ஏ தங்கத்தமிழ்ச்செல்வன், மக்களின் சீரிய முயற்சியில் தூர்வாரப்படும் கண்மாயைப் பார்வையிடச் செல்வதாக கிராம மக்களுக்குத் தகவல் கிடைத்தது. பல முறை மனுகொடுத்தும் தங்கள் கிராமத்தைக் கண்டுகொள்ளாத எம்.எல்.ஏ தற்போது கண்மாய் தூர்வாரும் பணியைப் பார்க்க வருவதை அறிந்த மக்கள், தங்கத்தமிழ்ச்செல்வனின் காரை முற்றுகையிட்டு, அவருக்கு எதிராக கோஷம் எழுப்பினர். வந்த வழியாக திரும்பிச் சென்றுவிடுங்கள் என்றனர். தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கிராம மக்களை சமாதானம் செய்தது மட்டுமல்லாமல், தங்கத்தமிழ்ச்செல்வனை பத்திரமாக அழைத்துச்சென்றனர். மக்கள் பணியில் முன் நின்று பங்கேற்காத சட்டமன்ற உறுப்பினர், கடைசி நேரத்தில் உள்ளே நுழைந்து ஆதாயம் தேட நினைப்பதாகவும், அதற்கு நாங்கள் இடம் கொடுக்கப் போவதில்லை எனவும் கிராம மக்கள் தெரிவித்தனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close