Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கொடுங்கையூர் தீ விபத்து: உயரும் பலி எண்ணிக்கை

சென்னை கொடுங்கையூரில் உள்ள ஒரு சிப்ஸ் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில், பலியானோர் எண்ணிக்கை 12  ஆக உயர்ந்துள்ளது. கடந்த 15-ம் தேதி, சென்னை கொடுங்கையூரில் உள்ள முருகன் சிப்ஸ் கடையில், இரவு 11.30 மணியளவில் சிலிண்டர் ஒன்று திடீரென வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இதில் 30-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இந்த விபத்தில், தீயணைப்பு வீரர் உட்பட பலர் பலியாயினர்

parthiban


காயமடைந்தவர்கள் அனைவரும் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். சிகிச்சைபெற்று வருபவர்களில், சிகிச்சை பலனளிக்காமல் பலியானோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. இந்நிலையில், இன்று அங்கு சிகிச்சைபெற்றுவந்த பார்த்திபன் என்பவரும் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். 57 சதவிகிதம் தீக்காயங்களுடன் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்த அவர், இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 24.

பலியானோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே செல்வது, உறவினர்களை கவலை அடையச் செய்துள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close