Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மத்திய குற்றப்பிரிவு காவலர் சங்கீதா புற்றுநோயால் மரணம்

ரத்தப் புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவந்த காவலர் சங்கீதா, சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். 


சென்னை கமிஷனர் அலுவலகத்தில், மத்திய குற்றப்பிரிவில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வந்தவர், வேலூரைச் சேர்ந்த சங்கீதா. இவர், சென்னையில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்துவருகிறார். இவருக்கு, ஏழாம் வகுப்பு படிக்கும் மகன் ஒருவர் இருக்கிறார். 

இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னால், இவருக்கு ரத்தப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்தார். இதைக் கேள்விப்பட்ட சென்னை மாநகர கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், சங்கீதாவை சந்தித்து ஆறுதல் கூறினார். அதன் பிறகு, காவலர் நல நிதியிலிருந்து ரூபாய் இரண்டு லட்சம் வழங்கினார். 
தொடர்ந்து சிகிச்சைபெற்றுவந்த சங்கீதா, நேற்று உயிரிழந்தார். அவரது உடல், சொந்த ஊரான வேலூருக்குக் கொண்டுசெல்லப்பட இருக்கிறது. அங்கு அவரது உடலுக்கு இறுதி மரியாதை செயப்பட்டு தகனம் செய்யப்படும்.   
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close