Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டெல்லியில் அய்யாக்கண்ணுவை அதிரவைத்த முதல்வர் பழனிசாமி!

விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்யக்கோரி டெல்லியில் நேரில் சந்தித்துப்பேசியபோது முதல்வர் பழனிசாமி அளித்த பதில், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணுவை அதிரவைத்துள்ளது.

விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும், நதிகளை இணைக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லி ஜந்தர்மந்தரில் மீண்டும் போராட்டம் நடந்து வருகிறது. இதனிடையே, குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் இன்று பதவியேற்க உள்ளார். இந்த விழாவில் தமிழக முதல்வர் பழனிசாமி பங்கேற்கிறார். டெல்லி வந்த முதல்வரை, அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் இன்று சந்தித்துப் பேசினர்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அய்யாக்கண்ணு, "பயிர்க் கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று முதல்வரிடம் வலியுறுத்தினோம். ஏரிகளுடன் ஆறுகள் இணைப்பு குறித்துப் பேசினோம்.

மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி 60 நாள் டைம் கேட்டிருந்தார். வங்கிகள் விவசாயிகளின் நகைகளையெல்லாம் ஏலம் விடக்கூடாது, விவசாயிகளின் நிலத்தை ஏலம்விட மாட்டார்கள். புதிய வழக்குகள் போட மாட்டோம் என்று மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி கூறினார். அதேபோல் தமிழக முதல்வரும், எங்களுக்கு உறுதிமொழி அளித்தார். இப்போது முதல்வர் மாத்திச் சொல்கிறார். "என்னிடம் ஃபைனான்ஸ் இல்லை. வருமானம் இல்லை. 10 ஆயிரம் சாராயக்கடையை மூடிட்டாங்க. அதில் இருந்து வருமானம் இல்லை. 2 ஆயிரம் கோடிக்கு மேல் நஷ்டம் வந்துவிட்டது. நான் என்னப்பண்ணுவது என்று இப்போது சொல்கிறார். அவரது பதில் எங்களுக்கு அதிர்ச்சியளிக்கிறது" என்றார்.

ஹெச்.ராஜா குறித்த கேள்விக்குப் பதில் அளித்த அய்யாக்கண்ணு, பாரதிய ஜனதா கட்சியிடமிருந்து கொலை மிரட்டல் வந்துள்ளது. ஆடிக்காரில் நான் செல்வதாக ஹெச்.ராஜா சொல்கிறார். என்னிடம் ஆடிக்காரே கிடையாது. அதேபோல் ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் சாப்பிடுவதாக கூறுகிறார். நான் அப்படிப்பட்ட ஹோட்டல்களில் சாப்பிடுவதே கிடையாது" என்றார்.

அண்மையில் எம்எல்ஏக்களின் சம்பளத்தை இருமடங்காக தமிழக அரசு உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close