Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'அறிவியல் துறைக்கான பட்ஜெட்டை ஒரு போதும் குறைக்க மாட்டோம்' - கர்நாடகா அறிவிப்பு!

இந்தியாவில் விவசாயிகளில் தொடங்கி விண்வெளி வரை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு போராட்டங்கள் நடந்துகொண்டுதான் இருக்கிறது. போராட்டங்கள் அறிவியல் துறையையும் விட்டு வைக்கவில்லை. அறிவியல் துறைக்கு அதிக  பட்ஜெட் ஒதுக்கப்பட வேண்டும் என்பது உட்பட  பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து இந்திய விஞ்ஞானிகள், நாடு முழுதும் போராட்டத்தை அறிவித்திருந்தார்கள்.

அறிவியல்

வருகிற ஆகஸ்ட் 9-ம் தேதி அனைத்து மாநில தலைநகரங்களிலும் ‘India March for Science’ என்ற பெயரில் அணிவகுப்பு ஒன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.  இந்நிலையில், பெங்களூரு பி.ஜி. 2017 மற்றும் பெங்களூரு இந்தியா Bio-2017 நிகழ்ச்சியில் கர்நாடக மாநில  அறிவியல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் பிரியங் கார்கே பேசும்போது “இந்திய அரசின் நிலைப்பாடு குறித்து எங்களுக்குத் தெரியாது. ஆனால், அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சிகளுக்கு வழங்கப்படும் எந்த பட்ஜெட்டையும் கர்நாடக அரசு நிறுத்தாது தொடர்ந்து வழங்கும். மேலும், அறிவியல் பயன்பாடுகள் அறிவியல் கூடங்களில் மட்டும் இருந்துவிடக் கூடாது அவை மக்களை சென்றடைய வேண்டிய அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொள்ளும்'' என்று தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் 9-ம் தேதி மாநில தலைநகரங்களில் நடக்கும்  அணிவகுப்பில் கலந்துகொள்ளுமாறு விஞ்ஞானிகள், மாணவர்கள் ஆசிரியர்கள், மக்கள் என அனைவருக்கும் அழைப்புவிடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close