Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'டாஸ்மாக் கடையைத் துவம்சம் செய்துவிடுவோம்' - போராட்டக்களத்தில் டி.எஸ்.பி-யை மிரளவைத்த பெண்கள்

பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி தமிழகம் முழுவதும் பெண்கள் போராட்டம் நடத்திவரும் சூழலில், கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றுவதற்காக ஒரு கிராமமே வீதிக்கு வந்து போராட்டம் நடத்தியுள்ளது. போராட்டத்தின்போது காவலரிடம் பெண்கள் வாக்குவாதம் செய்யும் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகிவிட்டது.     


 

                                     

நெடுஞ்சாலைகளில் இருந்த டாஸ்மாக் மதுக்கடைகளை அகற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து ஜெயங்கொண்டம் நகரில் இருந்த ஆறு டாஸ்மாக் கடைகள் ஒன்றன்பின் ஒன்றாக அகற்றப்பட்டன. கிராமப்புறங்களில் மட்டும் கடைகள் இயங்கிவந்தன. இதையடுத்து, நகரில் இருந்த கடைகள் அனைத்தும் மூடப்பட்டதால் கிராமப்புறங்களைத் தேடிச்சென்று பல ஆயிரக்கணக்கான குடிமகன்கள் சென்று மது அருந்தி வந்தனர். இந்தநிலையில், மூன்று தினங்களுக்கு முன் ஜெயங்கொண்டம் கீழக்குடியிருப்பிலிருந்து மலங்கன் குடியிருப்புக்குச் செல்லும் வழியில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதையடுத்து மலங்கன்குடியிருப்பு  மற்றும் கீழக்குடியிருப்பில் வசிக்கும் மக்கள், மதுபான லாரியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் மதுபாட்டில்களை இறக்காமல் இரவு நேரத்தில் இறக்கிவைத்தனர்.

                                                           டாஸ்மார்க் எதிராக போராடும் கிராம மக்கள்

நேற்று மதியமும் கடைதிறக்கும் முன்னதாகக் கீழக்குடியிருப்பு மற்றும் மலங்கன்குடியிருப்பில் உள்ள ஏராளமான பெண்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு கடை வாசலில் உட்கார்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த ஜெயங்கொண்டம் டி.எஸ்.பி கென்னடி, இன்ஸ்பெக்டர் விஜயக்குமார் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பேசிய பெண்கள், "மக்களுக்காகத்தானே இந்த அரசாங்கம். மக்களே இந்த டாஸ்மாக் கடை வேண்டாம் என்று சொல்லும்போது எதற்காக இந்தக் கடையை அகற்றாமல் வைத்திருக்கிறது. அப்போ பொம்பளைங்க தாலிய அறுத்து அதிலிருந்து வரும் காசு அரசுக்கு முக்கியமா சொல்லுங்க. இந்த டாஸ்மாக் கடையால் தினம் தினம் வீட்டில் பல பிரச்னைகளைச் சந்தித்து வருகிறோம். எங்களுடைய வாழ்க்கையை அழிக்கத் துடிக்கும் அதிகாரிகளுக்கு துணை போகாதீர்கள். இங்கிருந்து உடனடியாக டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் இல்லைனா கடையைத் துவம்சம் செய்வோம்" என்று எச்சரித்தனர்.

இதையடுத்து, "இன்னும் ஒருவாரத்தில் கடையை அகற்றிக் கொள்கிறோம்" என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து  பொதுமக்கள் கலைந்துசென்றனர். இதனால் கடந்த மூன்று நாள்களாக பொதுமக்கள் வெயிலையும் பொருட்படுத்தாமல் மறியலில் ஈடுபட்டதால் ஜெயங்கொண்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close