Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தமிழகத்தில் வெயில் அதிகரிக்கக் காரணம் இதுதான்!

தமிழகத்தில் அடுத்த சில நாள்களுக்கு வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பம்

கோடைக்காலம் முடிந்த பிறகு, தென்மேற்குப் பருவமழை தொடங்கியதால், தமிழகத்தில் வெயிலின் தாக்கம் சற்று குறைந்தது. பெரும்பாலான பகுதிகளில் மழையும் பெய்தது. இதனிடையே, தமிழகத்தில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகிறது. குறிப்பாக சென்னையில் வெயில் கொளுத்தியெடுக்கிறது. கோடைக்காலத்தில் நிலவு வருவதுபோல, வெயில் கொளுத்துவதால் மக்கள் அவதியடைந்துள்ளனர். 100 ஃபாரன்ஹீட்டுக்கும் மேல் வெயில் வாட்டி வதைத்து வருகிறது.

இந்நிலையில், "மேற்கிலிருந்து நிலக்காற்று வீசுவதால், தமிழகத்தில் தற்போது வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. கிழக்கில் இருந்து கடற்காற்று வீசும்போது, வெப்பத்தின் தாக்கம் குறையும். தமிழகத்தில் அடுத்த இரண்டு முதல் நான்கு நாள்களுக்கு வெப்பத்தின் தாக்கம், இயல்பைவிட அதிகமாகக் காணப்படும். முக்கியமாக, கடலோர மாவட்டங்களைக் காட்டிலும், உள்மாவட்டங்களில் இயல்பைவிட 3 முதல் 4 டிகிரிக்கு அதிகமாக வெப்பம் நிலவும்" என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close