Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'பாபா ஆட்சி மலரட்டும்'- ரவுண்டு கட்டும் ரஜினி ரசிகர்கள்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீ வில்லிபுத்தூரில் ரஜினி நற்பணி மன்றத்தினர் வைத்த பேனரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற  ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூரத்திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் வரும் 27-ம் தேதி புதன்கிழமை நடக்கவுள்ள நிலையில் பல்வேறு நிறுவனம், சங்கங்கள் சார்பில் தேரோட்டத்தைக் காண வருகை தரும் பக்தர்களை வரவேற்கும் வகையில் நகரில் ஆங்காங்கே பேனர் வைப்பது வழக்கம். 

இந்நிலையில், ஸ்ரீ வில்லிபுத்தூர் ரஜினிகாந்த் நற்பணி மன்ற கூட்டமைப்பு சார்பில் வைக்கப்பட்டுள்ள வரவேற்பு பேனரில், "ஆடி வரும் தேரழகைக் காணவரும் பக்தர்களை மக்கள் தலைவர், வருங்கால முதல்வர் ரஜினிகாந்த் சார்பாக வரவேற்கிறோம்" என்று பேனரின் மேல் பகுதியில் குறிப்பிட்டுவிட்டு, பின்புலத்தில் தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகக் கட்டடத்துடன் கூடிய ரஜினியின் படத்துக்கு கீழ் "பாவ ஆட்சி ஒழியட்டும் பாபா ஆட்சி மலரட்டும்" எனக் குறிப்பிட்டு அதனுடன் இந்த நற்பணி மன்றத்தைச் சேர்ந்த 26 பேரின் பாஸ்போர்ட் அளவு புகைப்படமும் இருந்தது . 

10 அடி உயரமுள்ள இந்த பேனரை ஸ்ரீ வில்லிபுத்தூர் நகரில் மெயின்பஜாரில் வைத்ததும் பேனரை பார்க்கவே கூடியது கூட்டம். போலீஸாருக்குத் தகவல் கிடைத்தும் பேனரில் உள்ள வாசகத்தைப் படித்துப் பார்த்த போலீஸார் பதறிப் போயி பேனரை உடனே அகற்றிவிட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close